- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி பகவானின் தாக்கம் குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சனி பகவானின் தாக்கம் குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்

- Advertisement -

சனிபகவான் என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் நடுக்கம் வந்துவிடும். ஏழரை சனி ஒருவருக்கு நடக்கிறது என்றால், அவர்களுடைய வாழ்க்கையில் நல்லதே நடக்காது என்று அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். ஆனால் அப்படி கிடையாது. சனி பகவான் என்பவர் நீதிமான். நீங்கள் செய்த நல்லது கெட்டதுக்கு ஏற்ப தான் அவர் உங்களுக்கான தண்டனையை வழங்குவார்.

உங்களுடைய ஜாதக கட்டத்தில் சனி பகவான் எப்படி இருந்தாலும் சரி, உங்களுக்காக நல்லதை மட்டும் செய்ய வேண்டும் என்றால், பின் சொல்ல கூடிய தவறுகளை நீங்கள் செய்யவே கூடாது. அது என்னென்ன தகவல்கள் அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சனி பகவானின் தாக்கம் குறைய

உண்மை, நேர்மை, நியாயம், என்று இருப்பவர்களை நிச்சயம் இந்த சனி பகவான் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். கஷ்டம் வரும்போது பொய் சொல்லுவது, பிரச்சனை வரும்போது பொய் சொல்லி, அதில் இருந்து தப்பிப்பது, நீதிக்கு புறம்பாக நடந்து கொள்வது, இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டால் உங்களுக்கு சனியின் பாதிப்பு நிச்சயம் இருக்கும். இது முதல் விஷயம். இது எல்லோரும் சொல்வதுதான். சரி, இருந்தாலும் நாமும் சொல்வோம். அனைவரும் நேர்மையோடு மனசாட்சிக்கு பயந்து நடக்க வேண்டும்.

குளிக்கும்போது தலைமேல் தண்ணீரை முதலில் ஊற்ற கூடாது. உடம்புக்கு மேல் தண்ணீரை முதலில் ஊற்ற கூடாது. இந்த தவறை செய்யாதீங்க. குளிக்கச் சென்றவுடன் முதலில் உங்களுடைய முழங்காலில் இருந்து பாதம் வரை கால்களை சுத்தமாக, உங்கள் கைகளால், மேல் பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் வரை தேய்த்தபடி கழுவி விடுங்கள். பிறகு குளிக்கத் துவங்குங்கள்.

- Advertisement -

சில பேர் பாத்ரூம் சென்று வந்தால், அதாவது சிறுநீர் கழித்தாலோ, மலம் கழித்தாலோ அந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு வெளியில் வருவார்கள். கால்களை சுத்தமாக கழுவவே மாட்டார்கள். என்னடா இது என்று யோசிக்காதீர்கள. நிறைய பேருக்கு இந்த பழக்கம் இருக்கும். நீங்களே சிந்தித்துப் பாருங்கள். ஆனால் வெளியில் சொல்ல மாட்டீர்கள். கழிவறைக்கு சென்ற பிறகு கால்களை சுத்தமாக கழுவவில்லை என்றாலும், உங்களுக்கு சனி பகவானால் பாதிப்புகள் ஏற்படும்.

சில பேர் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால் கால்களை கழுவக்கூடிய பழக்கம் இருக்காது. வெளியில் சென்று வீட்டுக்கு வந்தால் இரண்டு கால்களையும் பின்னங்கால் நனைய, முழங்கால் வரை சுத்தமாக தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். அதுதான் நல்லது. கால்களை சரியாக கழுவாதவர்களுக்கும் சனி பகவானால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது நம்முடைய ஜோதிடத்தில்.

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி விரதத்தின் பலனைப் பெற செய்ய வேண்டியது

பிறகு காகத்திற்கு சாப்பாடு வைப்பது. காகம் வந்து மொட்டை மாடியில் ஜன்னலில் கத்திக்கொண்டே இருக்கும். அந்தகாகத்திற்கு பாவம் புண்ணியம் பார்த்தாவது கொஞ்சம் சாப்பாடு போடுங்கள். காகத்தை ரொம்ப நேரம் கரையை விட வேண்டாம். காகத்திற்கு சாப்பாடு வைக்கவில்லை என்றாலும் சனி பகவானினால் பிரச்சனைகள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்