ஒருவருடைய வாழ்க்கையில் பொருளாதார என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தனி மனிதனுக்கு மட்டுமல்லாமல் இந்த நாட்டிற்க்கே பொருளாதார என்பது அத்தியாவசியம். அது இருந்தால்தான் அவர்களுக்கு முன்னேற்றம் என்பது நடைபெறும். அந்த வகையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஐப்பசி மூன்றாம் பிறை நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொருளாதார முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்
சந்திரனும் மகாலட்சுமி தாயாரும் சகோதர சகோதரிகளாக திகழ்கிறார்கள். அதனால் சந்திரனுக்குரிய நாளில் மகாலட்சுமியின் வழிபாட்டை மேற்கொள்வது என்பது அதீத பலனை தரும். இப்படி நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சந்திர பகவானுக்கு உரிய நாட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் மூன்றாம் பிறை. சிவபெருமானின் தலையில் இருக்கக்கூடிய இந்த மூன்றாம் பிறைக்கு அதீத பலன் இருக்கிறது என்றும் அந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை மாலை ஆறு முப்பது மணிக்கு செய்வது என்பது அதீத பலனை தரும். இதற்கு நமக்கு சந்திரனின் அருள் பெற்ற பொருளான சர்க்கரை என்பது வேண்டும். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சர்க்கரையை போட்டு பரப்பி கொள்ள வேண்டும். பிறகு அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த அகல் விளக்கிற்கு முன்பாக இரண்டு புறங்களிலும் ஏதாவது ஒரு நாணயத்தை வைத்து அந்த நாணயத்தின் மீது மொட்டு உடையாத ஒரு கிராம்பை வைக்க வேண்டும்.
இப்பொழுது இந்த தட்டை சந்திரனை பார்த்தவாறு வெட்ட வெளியில் அதாவது நம் வீட்டு மாடிக்கோ அல்லது பால்கனிக்கோ சென்று மேற்கு திசை பார்த்தவாறு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். பிறகு இந்த தீபத்தை ஏற்றி வைத்து சந்திரனுக்கு மூன்று முறை ஆராத்தி காட்ட வேண்டும். பிறகு “ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும். பிறை நிலா தெரியாத பட்சத்திலும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில்கொண்டு வந்து வைத்து விட வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்து விடலாம். சர்க்கரையை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அதில் வைத்த நாணயத்தையும் கிராம்பையும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளில் செய்வது என்பது அதீத பலனை தரும். சந்திர பகவான், சிவபெருமான், மகாலட்சுமி என்று அனைவரின் அருளையும் பெற்று பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும்.
இதையும் படிக்கலாமே:கந்த சஷ்டி விரதத்தின் பலனைப் பெற செய்ய வேண்டியது
அதிசக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்பவர்களுக்கு சந்திர பகவான் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறுவதோடு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.