- Advertisement -

பண பற்றாக்குறை நீங்க

- Advertisement -

பணம் என்ற மூன்றெழுத்து சொல் தான் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை நாம் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். எந்த ரூபத்தில் சேர்க்கலாம்? எப்படி சேர்க்கலாம்? எதை செய்தால் சேரும் என்று யோசித்து பல விதங்களில் முயற்சியும் செய்து கொண்டிருக்கிறோம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் இந்த பணமானது ஒரு சிலரிடம் மட்டுமே அதிக அளவில் சேரும். மற்றவர்களிடம் சேராது. அப்படி நம்மிடம் பணம் சேர வேண்டும் என்னும் பட்சத்தில் நம் வீட்டில் நம் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண பற்றாக்குறை நீங்க

ஒருவருடைய வீட்டில் பணத்திற்கு எந்தவித குறையும் இல்லாமல் இருந்தாலேயே அந்த குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் வந்துவிடும் என்று கூறலாம். ஏனென்றால் இன்றைய காலத்தில் பலரது இல்லத்திலும் பணத்தினால்தான் அதிகளவில் பிரச்சினைகள் என்பது வருகிறது. அதனால் பணம் சேர்வதற்கு நாம் என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டுமோ அந்த முயற்சிகள் அனைத்தையும் செய்வதோடு ஆன்மீக ரீதியாக சில பொருட்களையும் நம் வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். அப்படி வைப்பதன் மூலம் நாம் சம்பாதிக்கும் பணமானது நம்மிடம் நிலையாக இருக்கும். மேலும் பணத்தை அதிக அளவில் சம்பாதிப்பதற்குரிய வழிகளும் கிடைக்கும்.

- Advertisement -

இதில் முதலிடத்தை பிடிக்கக்கூடிய முக்கியமான ஒன்று என்னவென்றால் விநாயகர் தான். பொதுவாக எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு பிறகு தான் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி அடையும் என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் தான் நம்முடைய வீட்டிலும் நடனமாடும் நர்த்தன கணபதியின் சிலையை வாங்கி வைக்க வேண்டும். இந்த சிலை நம்முடைய வீட்டு கதவை திறக்கும் பொழுது அதற்கு எதிர் பக்கத்தில் இருப்பது போல் இருக்க வேண்டும். நம் உள்ளே நுழையும்போது இந்த விநாயகரை பார்க்கும்படி வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் நம் வீட்டிற்கு பணவரவு என்பது அதிகரிக்கும்.

அடுத்ததாக தேங்காய். தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. அதனால்தான் அனைத்து ஆலயங்களிலும் தேங்காயை இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்கிறார்கள். அப்படிப்பட்ட தேங்காய் வீட்டில் குறைந்தது இரண்டு மூன்றாவது எப்பொழுதும் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்காயை காய வைத்து வீணாக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்றாவதாக செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயாரின் அம்சமாக திகழக்கூடிய பொருட்கள் பல இருந்தாலும் வலம்புரி சங்கு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. இது மகாலட்சுமியின் அம்சம் என்ற ஒரு புறம் கூறினாலும் மகாவிஷ்ணுவின் கையிலும் இருக்கக் கூடியது என்பதால் இந்த சங்கை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் என்பது ஏற்படும். இதே போல் மகாலட்சுமி குடியிருக்க கூடிய மற்றுமொரு முக்கியமான பொருளாக திகழ்வதுதான் கிருஷ்ணரின் கையில் இருக்கக்கூடிய புல்லாங்குழல். இந்த புல்லாங்குழலையும் நம் வீட்டு பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலமும் நமக்கு செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும்.

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக் கூடியவர் மகாலட்சுமி என்றாலும் அந்த செல்வத்தை பாதுகாக்க கூடியவராக குபேரர் திகழ்கிறார். குபேரரின் அருள் நமக்கு கிடைத்தால்தான் மகாலட்சுமி தரவேண்டிய செல்வத்தை கூட நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதனால் ஒவ்வொருவருடைய வீட்டிலும் குபேரரின் சிலை என்பது கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். அந்த குபேரர் வடக்கு பார்த்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஐந்து பொருட்களையும் நம்முடைய வீட்டில் நாம் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பணம் இல்லை, பணக்கஷ்டமாக இருக்கிறது, பண பிரச்சனை இருக்கிறது என்று எந்த ஒரு எதிர்மறை வார்த்தையையும் கூற வேண்டிய சூழ்நிலையை உண்டாகாது.

இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை அஷ்டமி
எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகளில் பலன் கிடைக்கவில்லை, வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு ஏற்படவில்லை என்று நினைப்பவர்கள் முழுமனதோடு மேற்சொன்ன இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் அவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும், செல்வ செழிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்