நாளைய மாலை பெருமாளுக்கு உரிய மாத ஏகாதசி திதியானது பிறக்கிறது. நாளை மாலை எவர் ஒருவர் வீட்டில் பெருமாளுக்கு இந்த பூவை சூட்டி, இந்த விளக்கை ஏற்றி மனமுருகி வேண்டுதல் வைக்கிறீர்களோ, அவர்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனை நீங்கும். வீட்டில் வீண் விரைய செலவு இருக்கிறது, வருமானம் இல்லை, வறுமையால் பிரச்சனை, கடன் தொல்லை உள்ளது என்று கஷ்டப்படுபவர்கள் அனைவருக்கும் இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.
பொதுவாக பணக்கார சாமி என்றதுமே நம் நினைவுக்கு வருவது இந்த பெருமாள்தான். அந்த பெருமாளை வேண்டி அவருக்கு உரிய வளர்பிறை ஏகாதேசியில் வழிபாடு செய்யும்போது, இரட்டிப்பு பலன் உண்டு. நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்ய யாரும் தவற விடாதீர்கள். மிக மிக எளிமையான பரிகாரம்.
வளர்பிறை ஏகாதசி பெருமாள் வழிபாடு
நாளை பெருமாளுக்கு கட்டாயம் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பூக்களை சூடி வழிபாடு செய்ய வேண்டும். சாமந்திப்பூ போல உங்களுக்கு மஞ்சள் நிறத்தில் எந்த பூ கிடைத்தாலும் வைக்கலாம். சாமந்திப்பூவும் வைக்கலாம். தவறு கிடையாது. மஞ்சள் ரோஜா கிடைத்தால் அதையும் வாங்கி வைக்கலாம். பிறகு ஒரு சின்ன தட்டில் கொஞ்சமாக சுத்தமான மஞ்சள் தூள் போட்டுக் கொள்ளுங்கள். பூஜைக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளாக இருக்கட்டும்.
அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த விளக்குக்கு பக்கத்திலும் ஒரு மஞ்சள் நிற பூ வைக்க வேண்டும். இதுபோல பூஜை அறையில் எல்லா விஷயங்களையும் தயார் செய்துவிட்டு பெருமாள் முன்பு அமர்ந்து உங்கள் இருக்கக்கூடிய பிரச்சனையை மனதார பெருமாளிடமும் தாயாரிடமும் சொல்லி வேண்டிக் கொண்டால் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் கூடிய விரைவில் தீரும். இந்த வழிபாட்டை செய்யத ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய பிரச்சனை படிப்படியாக குறைவதை உணரலாம்.
நாளை மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 9:00 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். தீபம் ஒரு மணி நேரம் எரியட்டும். அவ்வளவுதான். இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்து அந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்து அந்த அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். மஞ்சள் நிற பூ வாடிய பிறகு பூஜை குப்பையோடு சேர்த்து விடுங்கள்.
அந்த தட்டில் இருக்கும் மஞ்சளை மட்டும் எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டி தினம் தோறும், அதில் பன்னீர் சேர்த்து குழைத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சளை நெற்றியில் வைக்க உங்களுடைய வருமானம் பெருகும், கடன் சுமை குறையும், வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும், வீண் விரைய செலவுகள் குறைக்கப்படும், பண வசியம் பல மடங்கு அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: பொருளாதாரத்தில் உயர கீழாநெல்லி வேர் பரிகாரம்
அற்புதமாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை யாரும் நாளை மாலை செய்ய தவற விடாதீர்கள். நிச்சயம் பெரிய அளவில் இருக்கும் பணக் கஷ்டத்திற்கு கூட ஏதாவது ஒரு வகையில் அந்த பெருமாள் ஒரு விடிவு காலத்தை கொடுப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.