- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதம்பதி ஒற்றுமை பெற ஏற்ற வேண்டிய தீபம்

தம்பதி ஒற்றுமை பெற ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

கார்த்திகை மாதத்தை பற்றிய விஷயங்கள் பல இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வது கணவன் மனைவி ஒற்றுமைக்குரிய வழிபாடுதான். இந்த வழிபாட்டை நாம் சிவபெருமான் பார்வதி இவர்களை நினைத்து செய்யக்கூடிய வழிப்பாடாக திகழ்கிறது. இந்த வழிபாட்டை பொதுவாக பலரும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று செய்வார்கள். அதை தவிர்த்து கார்த்திகை மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று இப்படி ஒரு மணி நேரம் மட்டும் வீட்டில் தீபம் ஏற்றினால் போதும். அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தம்பதி ஒற்றுமை பெற ஏற்ற வேண்டிய தீபம்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வந்தாலும் பிறகு அதை சரி செய்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களும் மனமகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அப்படி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றது, அடிக்கடி சண்டைகள் வருகின்றது, மனவருத்தம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால் போதும்.

- Advertisement -

இந்த தீபத்தை கார்த்திகை மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ஏற்ற வேண்டும். தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் இந்த தீபமானது எரிய வேண்டும். இந்த தீபத்தை ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய புதன் ஹோரையில்தான் ஏற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய புதன் ஹோரை என்பது காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள்ளும், மதியம் மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளும் வருகிறது. இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து ஒரு மணி நேரம் முழுவதும் தீபம் எறிவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் துளசி இலையை பரப்ப வேண்டும். துளசி இலை கிடைக்கவில்லை என்பவர்கள் சுத்தமான மஞ்சள் தூளை பரப்ப வேண்டும். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் நாம் இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து போடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இது மஞ்சள் நிற திரியாக இருப்பது கூடுதல் பலனை தரும். கடையிலிருந்து மஞ்சள் நிறத்தில் வாங்குவதற்கு பதிலாக நாமே மஞ்சளில் திரியை நனைத்து உலர வைத்து ஏற்றுவது என்பது அதீத பலனைத் தரும்.

- Advertisement -

இப்படி இரண்டு திரிகளையும் ஒன்றாக போட்டு நாம் தீபம் ஏற்றி அந்த தீபச்சுடருளியை பார்த்தவாறு கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்க வேண்டும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்பட வேண்டும், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்று வேண்டுதலை வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த தீபம் இருந்த பிறகு நாம் அதை குளிர வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:அறிவாற்றல் சிறந்து விளங்க படிக்க வேண்டிய திருப்புகழ்
இந்த முறையில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய இந்த குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை, சந்தோஷம், மகிழ்ச்சி என்று அனைத்தும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்