கஷ்டங்கள் விலகக் கூடிய மாதம் கார்த்திகை மாதம். கார்மேகம் சூழ்ந்து மழையை கொடுக்கக்கூடிய காலம் இந்த கார்த்திகை மாதம், கவலைகள் எல்லாம் நீங்கி கடவுளை வழிபாடு செய்யக்கூடிய மாதம் இந்த கார்த்திகை மாதம். அடிமுடி காண ஈசன் ஜோதி ஸ்வரூபமாக திருவண்ணாமலையில் காட்சி தந்ததும் இந்த கார்த்திகை மாதத்தில் தான். சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கக்கூடிய காலம் இந்த கார்த்திகை மாதம்.
இந்த கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் பெரிய அளவில் பலனை கொடுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஏனென்றால் இறைவனின் நாமங்களை நான் உச்சரிக்கை கொண்டே இருக்கக்கூடிய இந்த நேரத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் மட்டும் தான் நிறைவாக இருக்கும்.
பெரும்பாலானவர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய கஷ்டம் பணக்கஷ்டம். எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் சேரவில்லை, வந்த பணம் கையில் நிலைப்பதில்லை, ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பண பிரச்சனை வரிசை கட்டி நிற்கிறது. கடன்மேல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. வடிகட்ட வேண்டிய நிலைமை.
லோன் கட்ட வேண்டிய நிலைமை. இதிலிருந்து தப்பிப்பது எப்படி. இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வருமானத்தை அதிகரிக்க, பணப்பெட்டியில் நிறைய பணம் சேர இந்த கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரம் உள்ளது, ஒரு எளிய மந்திர வார்த்தையும் உள்ளது, உங்கள் வீட்டு குல தெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் பண பிரச்சனை அடுத்த கார்த்திகை மாதத்திற்குள் ஒரு முடிவுக்கு வரும்.
பணம் தரும் மந்திர வார்த்தை
‘ஓம் ஸ்வர்ண ரட்சகாய நமஹ’ இந்த ஒரு வார்த்தையை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் வரக்கூடிய பணத்தை பீரோவில் வைக்கும் போது, இந்த ஒரு வார்த்தையை சொல்லி வையுங்கள். எடுத்து செலவு செய்யும் போது சந்தோஷமாக இந்த வார்த்தையை சொல்லி பணத்தை செலவு செய்யுங்கள். திடீரென்று செலவு இருக்கிறது. ஆனால் கையில் பணம் இல்லை எந்த ரூபத்தில் ஆவது பணத்தை கொடு இறைவா, மகாலட்சுமி தாயே என்று சொல்லி இந்த 1 மந்திரத்தை சொல்லி பாருங்கள். அவசர தேவைக்கு பணம் கிடைக்கும். கார்த்திகை மாதம் மட்டுமல்ல, எப்போது தேவை என்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். தவறு கிடையாது.
இந்த கார்த்திகை மாதத்தில் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிழமையில் ஒரு பச்சை நிற துணியை எடுத்து, அதில் கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் பச்சை கற்பூரம், மூன்று ஏலக்காய்களை, வைத்து சின்ன முடிசாக கட்டிக் கொள்ளவும். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு ‘ஓம் ஸ்வர்ண இரட்சகாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி இந்த முடிச்சை பணப்பெட்டியில் வைத்தால், பணம் சேராத இடத்தில் கூட பணம் சேரும்.
இதுவரை எங்கள் வீட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலே பணப்பெட்டியில் நாங்கள் பணத்தை எடுத்து வைத்ததே இல்லை, என்ற சூழ்நிலை கூட சில பேருக்கு இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் கூட இலட்சக்கணக்கில் பணம் சேரும். 10 ரூபாய் கூட என் வீட்டு பீரோவில் இதுநாள் வரை நான் எடுத்து வைத்தது கிடையாது என்று சொன்னாலும், ஆயிரம் ஆயிரமாகா அந்த பீரோவில் பணத்தை சேர்க்க கூடிய ரகசியம் இந்த முடிச்சுக்கும், இந்த மந்திர வார்த்தைக்கும் உள்ளது.
இதையும் படிக்கலாமே: 20-11-2024 கார்த்திகை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
உங்களுக்கும் தேவை என்றால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். 48 நாட்கள் தான். அந்த முடிச்சுக்கு பவர் இருக்கும். இந்த பரிகாரம் உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது, முடிச்சை வைத்த பின்பு, கொஞ்சம் பணம் பீரோவில் சேருகின்றது என்ற சூழ்நிலை வந்தால், 48 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுசாக இதேபோல முடிச்சை தயார் செய்து, புதுசாக மந்திரத்தை சொல்லி, அந்த முடிச்சுக்கு சக்தியூட்டி மீண்டும் முடிச்சை பீரோவில் வைக்கலாம். பணக்கஷ்டத்திலிருந்து விடுபட இந்த மாதம் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீகத்தை பின்பற்றி பலனடையலாம்.