ஒரு மாதத்தில், தேய்பிறை சஷ்டி வளர்பிறை சஷ்டி என்று இரண்டு திதிகள் வரும். இந்த இரண்டு திதிகளுமே முருகப்பெருமானுக்கு மிக மிக உகந்தது. நாளை 21.11.2024 வியாழக்கிழமையோடு சேர்ந்து கார்த்திகை மாதத்தின் தேய்பிறை சஷ்டி திதி வந்திருக்கிறது. கார்த்திகை மாதம் முருக பெருமான் அவதரித்த மாதம்.
இந்த மாதத்தில் முருகனது விரதங்களை தவறவிடாமல் கடைப்பிடிப்பது மிக மிக சிறப்பு. இந்த கார்த்திகை மாத சஷ்டி விரதத்தை எவர் ஒருவர் கடைப்பிடிக்கிறீர்களோ, அவர்களுக்கு ஒரு வருடம் சஷ்டி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை குருநாளாக இருப்பதால், இந்த நாளில் சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வீடு கிடைக்கும். வழிபாடு ஒன்றுதான். ஆனால் பலன்கள் பல உண்டு. யார் யாருக்கு எந்த வரம் தற்போது முதலில் தேவைப்படுகிறது, அந்த ஒரு வரத்தை வேண்டி நாளைய தினம் முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை
நாளை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். ‘ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா’ என்ற வார்த்தைகளை சொல்லிக்கொண்டு குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். விரதத்தை துவங்குங்கள். எப்போதும் போல சொல்வதுதான். விரதம் இருப்பது அவரவர் உடல் சூழ்நிலை, வேலைகளை பொறுத்தது. உங்கள் விருப்பம் போல விரதம் இருந்து கொள்ளலாம். ஆனால் உணவில் பூண்டு வெங்காயம் இது போன்ற பொருட்களை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் முடிந்தவரை பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் இருப்பது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை துவங்கிய இந்த விரதத்தை நாளை, மாலை 6 மணிக்கு வீட்டிலிருந்தபடியே இந்த விரதத்தை நீங்கள் நிறைவு செய்யலாம். கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியும் என்றால், வாய்ப்பு உள்ளவர்கள், சஷ்டி திதியில் முருகனுக்கு அபிஷேகம் நடக்கும், உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து, கோவிலில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் முருகா குரு முருகா’ என்ற மந்திரத்தை சொல்லி கோவிலை 6 முறை வலம் வந்து பிரார்த்தனை வைத்து கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் விரதத்தை முடித்துக் கொள்வதாக இருந்தால் முருகப்பெருமானுக்கு 6 நெய் விளக்குகள் ஏற்றலாம். வெற்றிலை தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள் ஒரே ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி உங்களால் முடிந்த நெய்வேதியத்தை முருகப்பெருமானுக்கு வையுங்கள். பால்பழம் கல்கண்டு வைத்தாலும் போதும். சர்க்கரை பொங்கல் செய்து வைக்க முடியுமா, மிக மிக சிறப்பு. பாயாசம் செய்து வைக்க முடியுமா மிக மிக சிறப்பு.
வீட்டில் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விடுங்கள். உங்களுக்கு முருகப்பெருமானின் என்ன மந்திரங்கள் படிக்க தெரியுமோ படியுங்கள். எதுவுமே சொல்லத் தெரியாதா? ‘ஓம் முருகா குரு முருகா! சரவணபவ!’ மந்திரத்தை சொல்லி தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான். இவ்வளவு எளிமையான வழிபாட்டை, நீங்கள் செய்தாலே போதும். அந்த கந்தனின் கருணை உங்கள் பக்கம் திரும்பும்.
நிறைய வேண்டுதலுக்கு, ஒரு விரதம் இருக்கக் கூடாது. ஒரு கோரிக்கையாக இருக்க வேண்டும். அந்த கோரிக்கையில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த முருகனின் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் நம்முடைய வேண்டுதலுக்கு உண்டான பலன் சீக்கிரமாக கிடைக்கும்.
நாளைய தினம் நீங்கள் என்ன வழிபாடு செய்தாலும் சரி, செய்ய தவறியவர்களும் சரி, காலை முதல் மனது சுத்தபத்தமாக வைத்துக்கொண்டு, அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல், அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படாமல், அதிகமாக பேசாமல், கோபப்படாமல் ‘முருகா முருகா முருகா’ என்ற நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும். எல்லோருக்கும் வேலை இருக்கிறது, ஓய்வு கிடைக்கும் போது முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தாலே போதும்.
இதையும் படிக்கலாமே: மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு அம்மன் வழிபாடு
முருகா முருகா நாமத்தைச் சொல்லும் போது ஒரு வருடம் சஷ்டி விரதம் இருந்த பலன் அல்ல, ஓராயிரம் வருடம் சஷ்டி விரதம் இருந்த பலனை தரக்கூடிய, ஒற்றை வார்த்தை ‘முருகா !’. அந்த வார்த்தைக்கு உள்ள சக்தி என்ன என்பது முருகனை உணர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நீங்களும் முருகர் பக்தர்களாக இருந்தால், நாளை தினம் இந்த வழிபாட்டை செய்யுங்கள். முருகனது நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.