நிறைய பேர் குடும்பத்தில் இன்று நிம்மதி கெட்டுப் போவதற்கு காரணம் மாமியார் மருமகள் பிரச்சனையாக தான் இருக்கும். திருமணம் நடந்து முடிந்த குறுகிய காலத்தில், மருமகளை பார்த்து மாமியார், நீ என் மகள் போல, மாமியாரை பார்த்த மருமகள், நீங்கள் எங்கள் அம்மா போல என்று சொல்லி தான் வாழ்க்கையை துவங்குவார்கள். ஆனால் போகப் போகத்தான் தெரியும். மாமியார் அம்மாவாக முடியாது, மருமகள் மகளாக மாற முடியாது என்பது.
நிறைய பேர் இதை அனுபவிதியாக பார்த்திருக்கலாம். மாமியார் மாமியார் போல நடந்து கொள்ளுங்கள். மருமகள் மருமகள் போல நடந்து கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு காலத்திற்கும் சண்டை சச்சரவை கொண்டு வந்து சேர்க்காது. அதை விடுத்து உருகி உருகி பழகுவதன் மூலம், எல்லையை தாண்டுவதன் மூலமாகத்தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது.
சரி ஒரு குடும்பத்தில் மாமியார் மருமகள் பிரச்சனை இருக்கிறது. இருவரும் ஒரே வீட்டில் வாழ வேண்டிய சூழ்நிலை. ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள கூட பிடிக்கவில்லை. என்ன செய்வது. நீங்கள் மாமியாராக இருந்தாலும் சரி மருமகளாக இருந்தாலும் சரி, இரண்டு பேருமே பின் சொல்லக்கூடிய இந்த அம்பாளை வழிபாடு செய்தாலே உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மீனாட்சி அம்மன் வழிபாடு
மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு, குடும்ப ஒற்றுமைக்கும் மீனாட்சியம்மன் வழிபாடு ரொம்ப ரொம்ப நல்லது. நிறைய பேர் வீட்டில் மீனாட்சி அம்மன் திரு உருவப்படம் இருக்கும். திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு தினமும் விளக்கு ஏற்றி குடும்ப பிரச்சனை வரக்கூடாது, சண்டை சச்சரவு வரக்கூடாது என்று பிரார்த்தனை வைத்து, கொஞ்சம் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘ஓம் மீனாட்சி அம்மையே போற்றி போற்றி’ என்று தினமும் சொல்லுங்கள். அந்த அம்பாள் முகத்தை பார்க்கும் போதே நம்முடைய மனதில் ஒரு சாந்தம் வந்துவிடும் கோபம் குறையும்.
ஒரு குங்குமச்சிமிழில் கொஞ்சம் குங்குமம் போட்டு, மீனாட்சி அம்மன் பாதத்திலேயே வைக்க வேண்டும். சாமி கும்பிட்டு குடும்ப சண்டே வரக்கூடாது என்று வேண்டி அந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் தினமும் இட்டுக் கொண்டு வந்தாலே குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் மாமியார் மருமகள் உறவு கொஞ்சம் பலப்படும்.
நீங்கள் மருமகளாக இருக்கும் பட்சத்தில் மாமியாரோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நீங்கள் மாமியாராக இருக்கும் பட்சத்தில் மருமகளுக்கும் எனக்கும் சண்டை வரக்கூடாது என்று சொல்லி இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் வழிபாட்டு ஒரு பக்கம் இருக்க, உங்களுடைய மனதை நீங்கள் தான் மாற்ற வேண்டும்.
இதையும் படிக்கலாமே: குரு புஷ்ய யோகம் 2024
நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் தான் நம்முடைய வீட்டில் இருக்கும் மற்றவர்களது நிம்மதி கெட்டுப் போகாது என்று முதலில் நீங்கள் உங்கள் மனதை சரி செய்து கொள்ளுங்கள். இன்று நாம் அடுத்தவர்களுக்கு இழைக்கும் தீங்கு, நாளை நம்முடைய சந்ததியரை நிச்சயம் பாதிக்கும். மாமியாராக இருந்தாலும் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மருமகளாக இருந்தாலும் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.