இந்த கார்த்திகை மாதத்தில் பல சிறப்பு வாய்ந்த நாட்கள் இருக்கிறது. கார்த்திகை மாதம் இறை வழிபாடு செய்ய மிக மிக உகந்த மாதம் தான் அந்த வரிசையில், நாளைய தினம் பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி திதியானது வரவிருக்கிறது. கார்த்திகை மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியை, ‘பைரவாஷ்டமி’ என்று சொல்லுவார்கள்.
பைரவர் இந்த நாளில் தான் அவதாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் நிறைய கெட்ட விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறது, வாழ்க்கையில் நிம்மதியே இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து விபத்து, சில பேர் வீடுகளில் இதன் மூலம் உயிரிழப்புகள் கூட ஏற்படும், ரத்தக்காயம் அடிக்கடி ஏற்படுகிறது, இப்படி தொடர் அபசகுனங்கள் நடக்கின்றது என்றால், குடும்பத்தில் இருப்பவர்கள் நாளை (23-11-2024) கட்டாயம் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
அதுவும் இந்த பைரவாஷ்டமி சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது இன்னும் மிகச் சிறப்பு வாய்ந்த பலனை நமக்கு கொடுக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டிலும் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், ஏவல் பில்லி செய்வினை கண் திருஷ்டியின் மூலம் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், நாளைய தினம் நீங்கள் கட்டாயம் பைரவரை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
பைரவ அஷ்டமி வழிபாடு
வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் இருக்கும் பைரவர் சன்னிதானத்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நாளை கட்டாயம் நடக்கும். அந்த வழிபாட்டில் சென்று கலந்து கொள்ளுங்கள். உங்கள் கையால் பைரவருக்கு சிவப்பு நிறத்தில் பூ, சிவப்பு நிற பிரசாதம் செய்து கொண்டு செல்ல வேண்டும். சிவப்பு நிறத்தில் அரளிப்பூ செம்பருத்திப்பூ எது கிடைக்கிறதோ வாங்கிக் கொள்ளுங்கள். கேசரி செய்து கொண்டு போய் பிரசாதமாக வைக்கலாம்.
அப்படி இல்லை என்றால் மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து போட்டு வைரவருக்கு பிரசாதமாக வைக்கலாம். கூடவே கடுகு எண்ணெயை வாங்கிச் செல்லவும். நாளைய தினம் பைரவர் சன்னிதானத்தில் இரண்டே இரண்டு மண் அகல் விளக்குகளில் கடுகு எண்ணெய் ஊற்றி, சிவப்புத் திரி போட்டு தீபம் ஏற்றி பைரவரை மனம் உருக வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
எங்களுடைய குடும்பத்தில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மூலம் பாதிப்புகள் இருக்கிறது. அதிலிருந்து எங்களை காப்பாற்ற பைரவா என்று பைரவரது பாதங்களை சரணடைந்து, இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கடைசி எண்ணெயில் பைரவருக்கு விளக்கு ஏற்றினால் எதிர்மறை ஆற்றல் உடனே விலகும். சிறிது நேரம் பைரவர் கோவிலிலேயே குடும்பத்தோடு அமர்ந்து பைரவாஷ்டகம், பைரவர் போற்றி பாடல்களைப் படித்துவிட்டு வீடு திரும்பலாம்.
மூன்று எலுமிச்சம்பழம் வாங்கி பைரவர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொள்ளவும். அந்த எலுமிச்சம் பழத்தை மீண்டும் வாங்கி வந்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி, நிலை வாசல் படியில் கட்டி தொங்கவிடும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கி பணவரவை அதிகரிக்கும் பைரவர்
இந்த எளிமையான வழிபாட்டு முறையை நாளைய தினம் நீங்கள் செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் நடக்கும் கெடுதல்கள் குறையும். எதிர்மறை ஆற்றலால் உண்டாக்கப்படும் தாக்கங்கள் குறையும். உங்களை தாக்கிய ஏவல் பில்லி சூனியம் கூட உங்களையும் உங்கள் உடம்பை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. அதி அற்புதமான இந்த ஆன்மீகம் வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறவும்.