கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கும், சிவபெருமானுக்கும், முருகனுக்கும் எப்படி சிறப்பான மாதமோ, அதே போல தான் கார்த்திகை மாதம் ஹனுமன் வழிபாட்டிற்கும் சிறப்பு வாய்ந்த மாதமாக சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே பிரம்மச்சரியம் விரதம் இருப்பது, வாழ்க்கைக்கு நன்மை தரும் என்பதும் ஆன்மீக ரீதியான நம்பிக்கை.
அதனால்தான் கார்த்திகை மாதம் துவங்கியவுடன் ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு, பிரம்மச்சரிய விரதம் இருந்து, வழிபாட்டை மேற்கொள்கின்றோம். அனுமனும் ஒரு பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிக்கும் இறைவன் தான். இந்த அனுமன் வழிபாட்டை கார்த்திகை மாதத்தில் செய்யும் போது வாழ்க்கையில் இருக்கும் பெரிய பெரிய கஷ்டங்கள் கூட ஒரு சில நாட்களில் நம்மை விட்டு விலகி விடும் என்பது ஒரு நம்பிக்கை.
பெரிய பெரிய கஷ்டம் என்றால், சில பேருக்கு வாழ்க்கையே முடிந்து போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கும். இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால், தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுவிடலாம் என்று வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் நிற்பார்கள். அப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால் இந்த கார்த்திகை மாதம் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு ஹனுமன் வழிபாடு. எப்படி தெரியுமா. வழிபாடும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பிரச்சனைகள் கஷ்டமாக இருக்கும் போது, அதை சரி செய்ய கஷ்டமான பரிகாரத்தை செய்வதுதான் ஒரே வழி.
கார்த்திகை மாதம் ஹனுமன் வழிபாடு
இந்த பரிகாரத்தை படிக்க உடனேயே, அடுத்த நாளே இந்த பரிகாரத்தை செய்ய துவங்கி விடுங்கள். அனுமனை கார்த்திகை மாதம் முடிவதற்குள் 1008 முறை வலம் வர வேண்டும். ஒரே நாளில் 1008 முறை ஹனுமன் சன்னிதானத்தை வளம் வருவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. நாளை முதல் தினமும் அனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். தினமும் உங்களால் அனுமனை எத்தனை முறை வலம் வர முடியும் என்று பாருங்கள். 108 முறை கணக்கு வைத்துக் கொள்ளலாம், அல்லது 51 முறை கணக்கு வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். 1008 சுற்றை உங்கள் விருப்பம் போல பிரித்துக் கொள்ளுங்கள்.
இன்று கார்த்திகை மாதம் 8 தேதி ஆகிறது. கார்த்திகை 9ஆம் தேதியில் இருந்து இந்த வழிபாட்டை நீங்கள் செய்ய துவங்கினாலும், கார்த்திகை மாதம் முடிவதற்குள் இந்த வழிபாட்டை அனுமன் கோவிலில் நல்லபடியாக நிறைவு செய்து கொள்ள முடியும். வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலில் அனுமன் சன்னிதானம் இருந்தாலும் அந்த சன்னிதானத்தில் இந்த வழிபாட்டை மன நிறைவோடு செய்யலாம்.
உங்களை வருத்திக் கொண்டு ஹனுமன் பாதத்தில் சரணடைந்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற நாமத்தை சொல்லி, உங்களுக்கு கஷ்டத்தை தரும் ஒரே ஒரு பிரச்சனையை மட்டும் அனுமன் பாதத்தில் இறக்கி வைத்து, கார்த்திகை மாதம் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை செய்து வாருங்கள். நிச்சயம் அதற்கு உண்டான பலன் கார்த்திகை மாதம் முடிந்த உடனேயே உங்கள் கையை வந்து சேரும். தீர்க்க முடியாத அந்த ஒரு சிக்கலில் இருந்து சுலபமாக வெளிவரக்கூடிய வழியை அந்த அனுமன் நிச்சயம் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான்.
அதில் ஒரு துளி சந்தேகமும் கிடையாது. இந்த வழிபாட்டை செய்யும் போது, அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணை காப்பு, செந்தூரக் காப்பு, வடை மாலை சாத்துவது இப்படி என்ன செய்ய முடியுமோ அதை அனுமனுக்கு செய்யலாம். தினமும் இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு போய் கொடுத்து அனுமனை வழிபாடு செய்தாலும் போதும். கொஞ்சம் துளசி இலைகளை மாலையாக கட்டிப்போட்டு ஹனுமனை வளம் வந்தாலும் போதும்.
இதையும் படிக்கலாமே: மனைவிமார்களுடன் நவகிரக வழிபாடு
முழு நம்பிக்கையோடு முழுமூச்சோடு இந்த வழிபாட்டை நிறைவு செய்யும்போது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சிரமங்கள் குறைவதை நீங்களே உணர்வீர்கள். இந்த மாதம் உங்கள் கஷ்டம் தீர்க்கும் வந்திருக்கும் அனுமன் வழிபாடு இது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு ஒரு வரப் பிரசாதம் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.