- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனைவிமார்களுடன் நவகிரக வழிபாடு

மனைவிமார்களுடன் நவகிரக வழிபாடு

- Advertisement -

கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் பரஸ்பர ஒற்றுமை, திருமணம் ஆகி சில மாதங்களுக்குப் பிறகு அடியோடு காணாமல் போய்விடுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சியே திருமண பந்தத்தின் அடிப்படை உணர்வு. இந்த உணர்வு இல்லை என்றால் அது பிரிவுக்கு வழி வகுத்து விடுகிறது. சண்டை போடும் கணவன் மனைவிகள் இந்த நவகிரக சன்னிதியை வழிபட்டால் ஒற்றுமை உண்டாகும் என்பது ஐதீகம். அதைப் பற்றிய கூடுதலான தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

திருமண பந்தத்தில் எனக்கு பிடிக்காததை நீ செய்து விட்டாய், உன்னை ஏன் நான் புரிந்து கொள்ள வேண்டும்? என்று முரண்டு பிடிக்க கூடாது. ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமல்லாமல், அவர்களிடம் இருக்கும் கெட்டவைகளையும் சேர்த்து ஏற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பாகும். உன் மீது வைத்திருக்கும் அன்பு எல்லையற்றது என்பதை நீங்கள் உணர்த்தினால் போதும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நீங்களே கதி என்று உங்கள் காலடியில் கிடப்பார்கள்.

- Advertisement -

பொதுவாக எல்லா ஸ்தலங்களிலும் நவகிரகங்கள் தனியாகத் தான் அமைந்திருக்கும். நவகிரகங்களில் ஒன்பது கிரகங்களும் சதுர வடிவத்தில் வெவ்வேறு கோணங்களில் இடம்பெற்றிருக்கும். நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டு வருபவர்களுக்கு தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். அது போல கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாவதற்கு மனைவியுடன் கூடிய நவகிரகங்களை வழிபட வேண்டும்.

எல்லா இடங்களிலும் தனித்தனியாக இருக்கும் இந்த நவகிரகங்கள் ஒரு சில முக்கிய ஸ்தலங்களில் தம்பதி சமேதராக அமையப் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். அத்தகைய கோவில்களில் முதன்மை பெறுவது கரூர் அருகே இருக்கும் செட்டிபாளையத்தில் அமைந்துள்ள குண்டலீஸ்வரர் திருக்கோவில் நவகிரகம் ஆகும்! இங்குள்ள நவகிரகங்கள் மனைவிமார்களுடன் தம்பதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே போல கோவை மாவட்டத்தில் கோனியம்மன் ஆலயத்திலும் நவகிரகங்கள் தம்பதி சமேதராக அமைக்கப்பட்டிருக்கும். மேலும் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் பச்சைமலை முருகன் கோவிலிலும் நவகிரகங்கள் தனியாக இல்லாமல் மனைவிமார்களுடன் காட்சி தருகின்றனர்.

- Advertisement -

இது போல பல்வேறு இடங்களில் நவகிரகங்கள் மனைவிமார்களுடன் இருந்தால், அந்த ஸ்தலத்திற்கு கண்டிப்பாக தம்பதி சமேதராக நீங்களும் சென்று வழிபட்டு வாருங்கள். பிரிந்த கணவன் மனைவிக்குள் இருக்கும் நுண் சிக்கல்களையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த அமைப்பு இந்த அமைப்பு. விசேஷமான நவகிரக மனைவிமார்களுடன் கூடிய இந்த அமைப்பானது, பிரிந்த தம்பதிகளையும் ஒரு வருடத்திற்குள் ஒன்று சேர்த்து வைக்கும் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளன. நவகிரக தோஷங்களால் பீடிக்கப்பட்டு இருக்கும் தம்பதிகள் அடிக்கடி குடும்பத்தில் இருக்கும் நிம்மதியை சீர்குலைப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:
23-11-2024 கடன் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் நடிக்கவும் செய்வார்கள். சமூகத்திற்காக வாழும் நீங்கள், உண்மையிலேயே உங்கள் திருமண பந்தத்திற்கு மதிப்பு கொடுத்தால், ஈகோ என்னும் இந்த அரக்கனை துவம்சம் செய்து விட்டு ஏன் உங்களுக்குள் சண்டை நடக்கிறது? யார் காரணம்? இதை சரி செய்ய என்ன செய்யலாம்? என்பதை இருவருமாக அமைதியான மனநிலையில் அமர்ந்து பேசி புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்படி செய்தாலே பாதி கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். பிரிவதற்காக திருமணங்கள் நிகழ்த்தப்படுவது கிடையாது!

சற்று முன்