தீபத்திற்கு பெயர் போன மாதமாக திகழக்கூடியது கார்த்திகை மாதம். மற்ற மாதங்களில் நாம் வீட்டில் தீபம் ஏற்றினாலும் கார்த்திகை மாதத்தில் அதிக அளவில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். சிவபெருமானே அடி முடி அறியாத அண்ணாமலை ஜோதியாக தோன்றியதும் இந்த கார்த்திகை மாதம் தான் என்பதால் கார்த்திகை மாதத்திற்கு தீப வழிபாட்டிற்கும் அதீத தொடர்பு இருக்கிறது. எந்த ஒரு தீப வழிபாட்டை செய்ய ஆரம்பிப்பதாக இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் தொடங்கினோம் என்றால் அந்த வழிபாடு சிறப்பாக நடைபெறும் என்றும் அந்த வழிபாட்டிற்குரிய பலன் முழுமையாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடன் பிரச்சினை தீர்வதற்கு செய்ய வேண்டிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கார்த்திகை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம்
எந்த ஒரு வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் முதலில் தீபம் ஏற்றி வைத்து தான் வழிபாடு செய்வோம். ஆலயத்திற்கு செல்வதாக இருந்தால் கூட தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் கற்பூரத்தை ஏற்றி வைத்தாவது வழிபாடு செய்வோம். கற்பூரமும் ஒருவகையில் தீப வழிபாட்டிற்குரியதாகவே கருதப்படுகிறது. அதனால் தீப வழிப்பாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் தீபத்தை நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வத்தின் அம்சமாகவே திகழும் என்று கூறப்படுகிறது.
எந்த ஒரு பிரச்சனை தீரவேண்டும் என்று நினைத்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தோம் என்றாலும் அந்த பிரச்சனை தீர்வதற்கு அந்த தீபச்சுடரொளியே ஒரு வழியை நமக்கு காட்டும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். 16 புது அகல் விளக்குகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்திலோ அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்திலோ இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டு பூஜையறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி 2 பஞ்சுத்திரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக அட்சதை, மஞ்சள், குங்குமம், மலர்கள் போன்றவற்றை வைத்து உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று என்ற வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.
இந்த தீபமானது குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும். இந்த தீபத்தை நாம் குளிர வைக்க கூடாது, அதுவாகவே குளிர வேண்டும். முதல் வாரம் வழிபாடு நிறைவடைந்துவிட்டது. இரண்டாவது வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் நாம் முதல் வாரத்தில் ஏற்றி வைத்த அந்த அகல் விளக்கையும் புதிதாக வாங்கி வைத்த அகல் விளக்குகிலிருந்து ஒரு விளக்கையும் சேர்த்து வைத்து இரண்டு தீபமாக ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் பழைய வாரத்தில் ஏற்றிய விளக்கும் புதிதாக ஒரு விளக்கும் வைத்து 16 வாரங்கள் தொடர்ச்சியாக ஏற்ற வேண்டும்.
16 வது வாரம் 16 அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுவோம். அன்றைய தினத்தில் வீட்டிலேயே ஏதாவது ஒரு இனிப்பு வகையை செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு நிறைவடைந்த பிறகு இரண்டு சுமங்கலிகளுக்கு தங்களால் இயன்ற சுமங்கலி பொருட்களை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இயன்றவர்கள் அன்னதானம் செய்வது மேலும் அதில பலனை தரும்.
இதையும் படிக்கலாமே:செல்வம் பெருக 3 தேவ மூலிகை
இந்த முறையில் நாம் தொடர்ச்சியாக 16 வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் தீபமேற்றி நம்முடைய பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழி பிறக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.