- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் பெருக 3 தேவ மூலிகை

செல்வம் பெருக 3 தேவ மூலிகை

- Advertisement -

எல்லா கோவில்களிலும் இந்த மூன்று பொருட்களை கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு பயன்படுத்துவார்கள். மூலவரின் திருமேனியை பராமரிக்க இந்த மூன்று பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் வரக்கூடிய நறுமணமானது இறையருளை அதிகரிக்கச் செய்யும் என்றும் நம்பப்படுகிறது. தேவ மூலிகையாக இருக்கும் இந்த மூன்று பொருட்கள் வீட்டில் இருந்தால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். அதை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கோவிலுக்குள் நுழைந்தாலே மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம், கற்பூரம் ஊதுபத்தி ஆகியவற்றின் வாசனை பக்தியின் பால் நம்மை நோக்கி ஈர்க்கும். நறுமணம் மிக்க எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. கோவிலுக்குள் சென்றாலே இந்த நறுமணம் தான் நம்மை சாந்தப்படுத்தும். மனதை ஒருமுகப்படுத்தி லேசாக மாற்றிவிடும்.

- Advertisement -

பெரும் துன்பம் இருந்தாலும், கோவிலுக்குள் நுழைந்த உடன் கர்ப்ப கிரகத்தை நெருங்கும் பொழுதே, உடலில் புல்லரிப்பு ஏற்படும். மூலவருக்கு பயன்படும் அபிஷேக பொருட்களில் இந்த மூலிகைகளும் சேர்க்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்க பெறும், இந்த மூன்று பொருட்களை வீட்டில் வெள்ளி தட்டில் வைத்து தூபம் காண்பித்தால் சகல செல்வங்களும் நம் வசப்படும் என்று இம்மூலிகையை பற்றிய குறிப்புகளும், பாடல்களும் நமக்கு எடுத்துரைக்கிறது.

தேவ மூலிகையில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது கோரோசனை. பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த மூலிகை தேன் அல்லது பால் அல்லது நெய் ஆகியவற்றுடன் குழைத்து நெற்றியில் திலகம் போல வைத்துக் கொண்டு சென்றால் எந்த விதமான காரியங்களும் தடை இல்லாமல் ஜெயமாகும் என்பது ஐதீகம். அது போல அடுத்ததாக இருப்பது புனுகு. இது அடர்ந்த காடுகளில் இருக்கும் புனுகு பூனையிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு வகையான திரவம் ஆகும். சுத்தமான புனுகு மூலவர் திருமேனியில் சாற்றி வைபவம் நடத்தப்படுவது உண்டு. திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் வெள்ளிக்கிழமைகளில் புனுகு சாற்றல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

- Advertisement -

மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது ஜவ்வாது. ஜவ்வாது நறுமணம் மிக்க ஒரு தெய்வீகமான பொருள் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் வாசம் எல்லாவிதமான எதிர்மறை ஆற்றல்களையும் நம்மிடமிருந்து விலக்கி வைக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு ஜவ்வாது பூச, திருஷ்டிகள் அகலும். புனுகு திருமண தடை, புத்திர பாக்கிய தடை, தொழில் தடை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும், வசிய பரிகாரங்கள் செய்யவும் பயன்படுத்தப்படும்.

இதையும் படிக்கலாமே:
சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க கல் உப்பு பரிகாரம்

புனுகு, கோரோசனை, ஜவ்வாது ஆகிய மூன்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வெள்ளி தட்டில் வைத்து பூக்களால் சுற்றிலும் அலங்காரம் செய்து வெள்ளிக் கிழமைகளில் தூபம் போட்டு, தீபம் காண்பித்து வர குடும்பத்தில் செல்வ வளமானது உயர ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை. இம்மூன்றும் இருக்கும் இல்லங்களில் அஷ்டலட்சுமிகளும் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இம்மூன்று மூலிகை பொருட்களையும் கோவில்களுக்கு அர்ச்சனை தட்டுடன் சேர்த்து வைத்து தானம் செய்து வர குலவிருத்தி உண்டாகும். செல்வமானது மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்லும்.

சற்று முன்