அசுர வேகத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை மனதார நினைத்து, பூஜை அறையில் பூஜிக்க வேண்டும். அப்போது நிச்சயம் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் விலகும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய வாழ்க்கையில் சரசரவென வேகமான முன்னேற்றம் இருக்கும்.
அந்த வகையில் நாளைய தினம் வரவிருக்கும் கார்த்திகை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் மகாலட்சுமியை வசியம் செய்ய ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மகாலட்சுமி வசிய தீபம்
இந்த தீபம் ஏற்ற உங்களுக்கு ஒரு மண் அகல் விளக்கு, சுத்தமான நெய், கொஞ்சம் பச்சை கற்பூரம், பஞ்சு திரி இருந்தால் போதும். மகாலட்சுமி தாயாருக்கு முன்பு மண் அகல் விளக்கை வைத்து, நெய் ஊற்றி, அதில் பஞ்சு திரி போட்டு, பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு தீபம் ஏற்றி வைத்தாலே மகாலட்சுமி தேவி வசியமாகி, அந்த தீபச்சுடரில் உங்களுக்கு காட்சி கொடுப்பாள்.
நிச்சயம் உங்கள் மனதில் நம்பிக்கையோடு இந்த விளக்கை ஏற்றினால் மகாலட்சுமியை அந்த தீபச்சுடரில், உங்களால் காண முடியும். நம்பிக்கையிருந்தால் இதை செய்து பாருங்கள். இது தவிர உங்களுடைய வீட்டு மகாலட்சுமியின் திரு உருவப்படத்திற்கு நாளை வாசம் நிறைந்த பூக்களை போட வேண்டும்.
மல்லி, முல்லை, ஜாதிப்பூ, பன்னீர் ரோஜா இப்படி எந்த பூ கிடைத்தாலும் வாங்கிப் போடலாம். தாமரை பூ வைத்தாலும் மிகச்சிறப்பான பலனைத் தரும். மரிக்கொழுந்து என்று சொல்லுவார்கள். இறைவனை வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த மரிக்கொழுந்து இலையில் இருந்து வரக்கூடிய வாசத்திற்கு உள்ளது. மரிக்கொழுந்து என்பது பச்சை நிறத்தில் இலை போல தான் இருக்கும்.
பூக்கடைக்காரரிடம் கேட்டாலே சொல்லுவாங்க. இன்றைக்கு சொல்லி வையுங்கள். நாளைக்கு உங்களுக்கு அந்த மரிக்கொழுந்து கிடைத்தால் வாங்கி வந்து மகாலட்சுமிக்கு பூஜிப்பது மிக மிக சிறப்பு. நாளைய தினம் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த மகாலட்சுமி வழிபாட்டை செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 8:30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளலாம். இப்படி மகாலட்சுமிக்கு வழிபாடு செய்யும்போது பசும்பாலால் செய்த நெய்வேத்தியம் வைப்பது, மிக மிக சிறப்பு. பால் பாயாசம் செய்து வைக்கலாம். முடியாது என்பவர்கள் பசும்பாலை காய்ச்சி அதில் நாட்டு சர்க்கரை போட்டு ஏலக்காய் தட்டி போட்டு பூஜையறையில் வைத்து நெய்வேதியும் வைத்தாலும் சிறப்பான பலனைத் தரும்.
இதையும் படிக்கலாமே: நோய் தீர்க்கும் சண்முக கவசம்
இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம்பிக்கை முதலில் தேவை. யாருக்கு இந்த பூஜை செய்தால் வாழ்வில் கஷ்டங்கள் தீரும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறதோ, நாளை மேலே சொன்ன விளக்கை ஏற்றி மகாலட்சுமியே வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய கஷ்டம் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.