பிரபஞ்சத்தின் ஆற்றல் அதிகமாக இருக்கக் கூடிய நாட்களாக திகழக்கூடியது அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள். அதனால் தான் இந்த தினங்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நமக்கு அபரிவிதமான பலனை தரும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் செய்யக்கூடிய எந்த ஒரு தாந்திரீக பரிகாரமாக இருந்தாலும் அது பல மடங்கு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்ததால்தான் இந்த தினங்களில் நாம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இப்படி நாம் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு யாரேனும் தீங்கு செய்ய நினைத்தால் கூட அந்த தீமைகளும் விலகி ஓடும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அதீத சக்தி வாய்ந்த நாட்களாக தான் இந்த நாட்கள் திகழ்கின்றது. அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் அதிக அளவில் சக்திகள் இருக்கிறது என்றும் கார்த்திகை அமாவாசையில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண தேவை பூர்த்தி அடைய
பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் அல்லவா? அதே போல் தான் பணவரவை அதிகரிக்க கூடிய மகாலட்சுமி குபேரரின் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அன்றைய தினத்தில் நாம் பணவரவை அதிகரிப்பதற்காக செய்யக்கூடிய வழிபாடுகளும் தாந்திரீக பரிகாரங்களும் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பண வரவை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் கார்த்திகை அமாவாசை திதி நிறைவடைவதற்குள் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை எழுதினாலே போதும். குபேரரின் அருளால் நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பண பற்றாக்குறை அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். 16 செல்வங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரம் குபேர பகவானுக்குரிய மந்திரமாக கருதப்படுகிறது. இது குபேர பகவானின் திருநாமங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்த திருநாமத்தை நாம் எழுதுவதற்கு நமக்கு வெள்ளை நிற பேப்பர் வேண்டும். நாம் எழுதக்கூடிய மையானது பச்சை நிற மையாக இருக்க வேண்டும். பச்சை என்பது குபேரருக்கு உரிய நிறம் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்பதால் அவருடைய திருநாமத்தை நாம் எழுதுவது பச்சை நிறத்தில் இருந்தால் அதற்குரிய பலன் விரிவிலேயே நமக்கு கிடைக்கும்.
இந்த திருநாமத்தை நாம் எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் எழுதலாம். எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் எழுதலாம். முழு மனதோடு லட்சுமி குபேரரை மனதார நினைத்துக் கொண்டு எழுதினால் போதும். வேறு எந்தவித நிபதனைகளும் தடைகளும் கிடையாது. இந்த திருநாமத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மதியம் 12 மணிக்குள் எந்த நேரத்தில் எழுத முடியுமோ அந்த நேரத்தில் எழுதினால் போதும்.
மந்திரம்
ஓம் விட்டேஸ்வராய நமஹ
இந்த மந்திரத்தை சரியாக 108 முறை எழுதி முடித்த பிறகு அந்த பேப்பரை அப்படியே மடித்து நாம் எங்கு பணம் நகை வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இது அங்கேயே இருக்கலாம். அந்த பேப்பர் கிழியும் சூழ்நிலைக்கு வந்தாலோ அல்லது அழுக்காகி இருந்தாலோ அப்பொழுது அதை எரித்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:அமாவாசை கல் உப்பு முடிச்சு பரிகாரம்
ஒரு தெய்வத்திற்கு எந்த அளவிற்கு சக்தி இருக்கிறதோ அதே அளவிற்கு தான் அந்த தெய்வத்தின் திருநாமத்திற்கும் சக்தி இருக்கும். அந்த வகையில் குபேர பகவானுக்குரிய இந்த திருநாமத்தை அமாவாசை தினத்தில் முழு மனதோடு நம்பி எழுதுபவர்களுக்கு குபேரரின் அருளோடு 16 செல்வங்களும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.