- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகொசுவை விரட்டும் பேய்மிரட்டி

கொசுவை விரட்டும் பேய்மிரட்டி

- Advertisement -

ஒரு சில மூலிகைகள் ரொம்பவும் விசித்திரமாகவும், மர்மம் நிறைந்ததாகவும் இருக்கும். சித்தர்கள் அருளிய இந்த மூலிகைகளை சரியாக பயன்படுத்தும் பொழுது அதன் பலன்களையும் நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். எல்லோருக்கும் மூலிகை பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்து விடுவது கிடையாது. அப்படியான ஒரு அற்புதம் நிறைந்த பேய்மிரட்டி மூலிகை கொசுவை எப்படி விரட்டும்? என்னும் ஆன்மீகம் கலந்த தகவல்களை தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

பேய் மிரட்டி மூலிகை இலை இருக்கும் இடங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட எதுவும் தங்க முடியாது. வீட்டில் துஷ்ட சக்திகள் இருந்தால் பேய் மிரட்டி மூலிகை இலைகளையும் அல்லது தண்டுகளையும் பயன்படுத்தி அதனை விரட்டுவார்கள். பேய்மிரட்டி பேய்களை மட்டுமல்லாமல், நல்ல ஆத்மாக்களையும் விரட்டக் கூடியது என்பதால் இதனை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

பேய் மிரட்டி மூலிகை இலையில் அறிவியல் படி ஒரு சில ஆசிட் போன்ற மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. இதனால் அது பச்சையாக இருக்கும் பொழுதே எரியும் தன்மையுடன் இருக்கிறது. பச்சை இலையை பஞ்சுத்திரி போல சுருட்டி எண்ணெயுடன் தீபம் ஏற்றினால், ஒரு நாள் முழுக்க நின்று எரியும். பௌர்ணமியில் மட்டுமே இதன் இலைகளையோ அல்லது தண்டுகளையோ வீட்டில் கொண்டு வர வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். பித்ருக்களை நெருங்கவிடாமல் செய்யக்கூடிய தன்மையும் இதில் இருப்பதால் நம் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பேய் மிரட்டி மூலிகை இலை நன்கு காய்ந்த நிலையில் இருப்பது பிரச்சினை இல்லை. இந்த இலைகளால் எந்த விதமான பாதிப்புகளும், தொந்தரவுகளும் வரப் போவது கிடையாது, எனவே காய்ந்த இலைகளை கொண்டு வந்து அதனை சாம்பிராணி தூபம் காட்டுவது போல தூபக்காலில் தணல் மூட்டி சாம்பிராணியுடன் இந்த இலைகளையும் சேர்த்து போட்டு அதன் புகையை வீடு முழுக்க பரவ செய்ய வேண்டும்.

- Advertisement -

பச்சை இலை நறுமணம் மிக்கதாக இருக்கும், இருப்பினும் அதனை முகரக் கூடாது என்று சித்தர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. காய்ந்த இலைகளுடைய இந்த புகையானது வீடு முழுக்க பரவும் பொழுது துஷ்ட சக்திகளுடன், நெகட்டிவ் எனர்ஜிகள் வெளியேறி கொசுக்களும் நம்மை தொந்தரவு செய்யாமல் வெளியில் சென்று விடுகிறது. கொசுக்களுக்கு இதன் நறுமணம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் ஒரு கொசு கூட நம் வீட்டில் தங்குவது கிடையாது. கொசுவர்த்தி தயாரிக்கும் சுருள்களில் கூட இந்த இலையை தான் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:
48 நாளில் கடன் அடைய பரிகாரம்

பேய்மிரட்டி மூலிகை குபேர மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பல பெயர்கள் கொண்டுள்ள இந்த மூலிகை, வீட்டில் இருக்க உகந்தது கிடையாது. தூரமான ஏதாவது ஒரு பகுதியில் வைத்து வளர்க்கலாம் அல்லது வனங்களில், காடுகளில் மட்டும் வைத்து வளர்க்க வேண்டியது ஆகும். பேய்மிரட்டி மூலிகை தண்டு பார்ப்பதற்கு மனித கை போலவே இருக்கும். இந்த தண்டு முழுவதும் மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து கட்டு போல கட்டி பௌர்ணமி அன்று நிலை வாசல் படியில் தொங்க விட்டால் போதும், எப்பேர்பட்ட கெட்ட ஆத்மாக்களும், தீமை செய்கின்ற ஆத்மாக்களும், துஷ்ட சக்திகளும், துர் தேவதைகளும் நம் வீட்டை விட்டு வெளியேறிவிடும். தரித்திரத்தை துரத்தி அதிர்ஷ்டத்தை கொடுப்பதால் தான் குபேர மூலிகை என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்