- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீய சக்திகள் விலக அஷ்டமி பரிகாரம்

தீய சக்திகள் விலக அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

சில பேருடைய வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலால் தொடர்ந்து பிரச்சினைகள் வரும். காத்து கருப்பு பிடித்து விட்டது. பேய் பிசாசு பிடித்து விட்டது என்று, சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் ஒரு மனிதனுடைய இயல்பு வாழ்க்கையை பாதித்துவிடும். கண்திருஷ்டி விழுந்து விட்டதால் எனக்கு வாழ்க்கையில் பிரச்சனை என்று சொல்லுவார்கள்.

நேரம் காலம் இல்லாமல் வெளியில் செல்லும், வயது பிள்ளைகளுக்கு, குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு என்று இந்த பரிகாரத்தை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளலாம். ஆனால் இந்த பரிகாரத்தை அஷ்டமி அன்று செய்ய வேண்டும். இன்றைய தினம் 8 -12-2024 வளர்பிறை அஷ்டமி திதி. ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

இன்றைய தினம் இந்த பரிகாரத்தை துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் ஹனுமன் கோவிலுக்கு சென்று செய்ய வேண்டும். மாலை 5 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து கயிறை கையில் கட்டிக் கொள்ளுங்கள். ஒரு கயிறுப்பு கயிறு எடுத்துச் செல்லுங்கள். அந்த கோவிலில் அமர்ந்து கருப்பு கயிரில் 9 முடிச்சுகள் போட வேண்டும். துர்க்கை அம்மன் கோவிலில் அமர்ந்து, இந்த முடிச்சை போட்டால் ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்று மந்திரத்தை 9 முறை சொல்லி அந்த முடிச்சை போடுங்கள். ஒவ்வொரு முடிச்சு போடும்போதும் ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லுங்கள்.

இதே போல தான் அனுமன் கோவிலில் அமர்ந்து இந்த முடிச்சை போட்டால் ‘ஓம் ஸ்ரீ ஹனுமந்தாய நமஹ’ என்ற மந்திரத்தை 9 முறை சொல்லி, 9 முடிச்சுகள் போட்டு அந்த கயிறை, அந்த சுவாமியின் பாதத்தில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து வாங்கி அந்த கோவிலிலேயே அமர்ந்து உங்களுடைய வலது காலில் இந்த கயிறை நீங்கள் கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் இப்படி இந்த கயிறை உங்கள் காலில் கட்டிக் கொண்டால் எந்த கெட்ட சக்தியும் உங்களை நெருங்காது. உங்களுக்கு காவலாக இந்த கயிறு இருக்கும். கயிரின் ரூபத்தில் கயிறில் போடப்பட்ட முடிச்சில் அந்த அனுமனும் துர்கை அம்மனும் அமர்ந்து உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். இத்தனை சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு பெரிய அளவில் தைரியத்தை தரும். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு.

இதையும் படிக்கலாமே: தங்க ஆபரண வசிய பூஜை

ஆனால் 48 நாள் மட்டும்தான் இந்த கயிருக்கு பவர் இருக்கும். 48 நாள் முடித்துவிட்டால் மீண்டும் அந்த கயிறை அவிழ்த்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் அஷ்டமி திதி வரும் போது இதே போல கயிறை முடிச்சு போட்டு, கோவிலுக்கு சென்று காலில் கட்டிக் கொள்ள வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் நல்ல பலனை தரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்