- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇழந்தது திரும்பக் கிடைக்க சிவ மந்திரம்

இழந்தது திரும்பக் கிடைக்க சிவ மந்திரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தை இழந்திருப்போம். அதை இழக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் யோசித்து வருத்தம் அடைந்து கொண்டு இருப்போம். அப்படி இழக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்டோம் என்னும் பட்சத்திலும், இது நம்மிடம் இருந்திருந்தால் நாம் இன்னும் நன்றாக இருந்திருப்போம் என்று நினைக்கக்கூடிய அளவில் இருக்கக் கூடிய எதுவாக இருந்தாலும் அதை திரும்பப் பெறுவதற்கு தீபம் ஏற்றக்கூடிய மூன்று நாட்களிலும் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இழந்தது திரும்பக் கிடைக்க சிவ மந்திரம்

அடி முடி காணாத ஜோதி வடிவமாக காட்சியளித்த நாளை தான் நாம் திருக் கார்த்திகை என்று கூறுகிறோம். அதனால்தான் அந்த நாளில் நாம் வீடு முழுவதும் தீபம் ஏற்றுகிறோம். அதற்கு முதல் நாள் பரணி தீபம் என்று ஒரு தீபத்தை ஏற்றுவோம் திருக்கார்த்திகைக்கு அடுத்த நாளும் தீபம் ஏற்றுவோம். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொருவரும் அவர்களுடைய இல்லத்தில் மூன்று நாட்கள் தீபம் ஏற்றுவார்கள். அப்படி மூன்று நாட்கள் தீபம் ஏற்றிய பிறகு சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

வீட்டில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி முடித்த பிறகு வீட்டு பூஜையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு சிவபெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த சிவபெருமானின் நாமங்களை கூற வேண்டும். இந்த நாமங்களை ருத்ர மந்திரம் என்று கூறுவதும் உண்டு. இந்த ருத்ர மந்திரத்தை இந்த மூன்று நாட்களும் தொடர்ச்சியாக சிவபெருமானை நினைத்து நாம் கூறும்பொழுது எதை இழந்திருக்கிறோமோ அதை நம்மால் திரும்ப பெற முடியும் என்று கூறப்படுகிறது.

அது வாழ்க்கையாக இருந்தாலும், சொத்தாக இருந்தாலும், பணமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறிவிட்டு எதை இழந்தோமோ அது திரும்ப கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்ட சிவபெருமானின் அருளால் அவை நமக்கு திரும்ப கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜூணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
ஓம் ஓம் ஓம் ஓம் சிவாய நம
ஓம் சிவாய நம ! சிவாய நம ஓம் !”

இதையும் படிக்கலாமே:திருக்கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத செயல்கள்
சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய கார்த்திகை தீப சமயத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களும் யார் ஒருவர் ஒரு முறையாவது கூறி சிவபெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இழந்துவிட்டேன் என்று சொல்வதற்கு எதுவுமே இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்