மார்கழி மாதம் என்றாலே விசேஷம். அதிலும் மார்கழி மாதம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மிக மிக விசேஷம். நாளைய தினம் மார்கழி மாதத்தில் வரப்போகும் முதல் வெள்ளிக்கிழமை. உங்கள் வீட்டில் காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொன்னால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் மொத்த பணக்கஷ்டமும் நீங்கும்.
வீட்டில் இருக்கும் பிள்ளைகள் சுறுசுறுப்போடு இருப்பார்கள். நன்றாக படிப்பார்கள். வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. சில பேர் எல்லாம் சொல்லுவார்கள். ஓடி ஓடி உழைத்தும் ஓய்ந்து போய்விட்டது. ஒரு ரூபாய் கூட லாபம் பார்க்கவில்லை. வந்த பணம் வீட்டில் தங்கவில்லை. என்று புலம்பி தீர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும் என்றால், மார்கழி மாதம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காமாட்சி அம்மனையும், மகாலட்சுமி அம்பாளையும் வணங்குவது தான் ஒரே வழி.
நாளை தினம் சூழ்நிலை காரணமாக, இந்த வழிபாட்டை செய்ய முடியவில்லை என்றாலும், அடுத்தடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வழக்கம்போலத்தான் வெள்ளிக்கிழமை என்றதுமே, காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
நாளைக்கு ஒரு நாள் உங்கள் வீட்டு காமாட்சியம்மன் விளக்கில் கொஞ்சமாக நெய்விட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். 2 டைமண்ட் கற்கண்டு பிரசாதம் வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தையும், காமாட்சியமனையும், மகாலட்சுமியையும் மனமுருசி வேண்டுதல் வைக்கவும். பணம் பல மடங்கு உங்கள் வீட்டில் பெருக வேண்டும் என்ற பிரார்த்தனையை வையுங்கள்.
கணவருக்கு வேலை நல்லபடியாக இருக்க வேண்டும். கணவர் தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடைய தொழில் மேலும் மேலும் விருத்தி அடைய வேண்டும் என்று, வீட்டில் இருக்கும் பெண்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு இருந்து இறைவனிடம் வரங்களை கேட்டால், தான் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்.
தவிர வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்ப நலனிற்காக பிரார்த்தனை செய்யவில்லை என்றால், நிச்சயம் அந்த குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் மகாலட்சுமியின் உருவம். அவளின் மனது நிம்மதி அடைந்தால் மட்டுமே குடும்பம் சுபிட்சம் அடையும். நாளைய தினம் உங்கள் மனதில் எந்த கோப தாபங்கள் இருந்தாலும் அதை தள்ளி வைத்து விட்டு, குடும்பத்திற்காக கணவருக்காக, குழந்தைக்காக இந்த பிரார்த்தனையை செய்து விடுங்கள். கொஞ்ச நேரம் அந்த பூஜை அறையில் அமர்ந்து காமாட்சியமனை நினைத்து இந்த மந்திரத்தை 18 முறை சொல்லுங்கள்.
மார்கழி மாதம் சொல்ல வேண்டிய காமாட்சி அம்மன் மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் காமாக்ஷி
தேவ்யை சித்தி தாத்ரே நமஹ !
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர மார்கழி வெள்ளி பரிகாரம்
இரண்டு வரி மந்திரம். எளிமையான மந்திரம் 27 முறை சொல்லி, முடித்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு பிரார்த்தனை வையுங்கள். மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த விளக்கை ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரும் சித்திர கோரையில் இந்த விளக்கை ஏற்றி பலன் பெறலாம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மேல் சொன்ன முறைப்படி விளக்கு ஏற்றி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு காமாட்சி அம்மனின் தரிசனமே கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.