- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி வெள்ளி அம்மன் பரிகாரம்

மார்கழி வெள்ளி அம்மன் பரிகாரம்

- Advertisement -

சில பேருடைய வீடுகளில் மனநிம்மதி என்பது ஒரு துளி கூட இருக்காது. வீட்டில் ஏதோ ஒரு கெட்ட சக்தி தங்கி இருப்பதாகவும் உணர்வார்கள். இப்படிப்பட்ட பயம் உங்களுக்கு இருந்தால், நீங்களும் இந்த மார்கழி மாதத்தில் வரும் ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்களுடைய வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்திகளும் பயந்து விலகி, வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

வீட்டிற்குள் புதுசாக எந்த ஒரு துஷ்டத்தையும், வந்து தாங்காது. நிலை வாசலில் அந்த அம்பாளே வந்து துணையாக நிற்பாள். சக்தி வாய்ந்த அந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மார்கழி வெள்ளி அம்மன் வழிபாடு

மார்கழி மாதம் வரும் வெள்ளிக்கிழமை அன்று, அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செல்லுங்கள். கோவிலுக்கு செல்லும்போதுதான் கடையிலிருந்து புதுசாக மஞ்சள் தூள் வாங்க வேண்டும். வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள் எடுத்துச் செல்ல வேண்டாம். கலப்படம் இல்லாத சுத்தமான மஞ்சள் தூள் வாங்கி அந்த அம்மன் கோவிலுக்கு எடுத்த செல்லுங்கள். அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள்.

வீட்டிற்கு அந்த மஞ்சள்தூளை கொண்டு வந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மஞ்சளை உங்கள் நிலை வாசல் கால் இருக்கும் அல்லவா அது முழுவதும் பூச வேண்டும். நான்கு பக்கமும் வாசல் கால் சட்டம் இருக்கும் அல்லவா, அந்த இடத்திலும் இந்த மஞ்சளை விரல்களால் எடுத்துப் பூச வேண்டும். நிலை சட்டத்தில் மஞ்சள் பூசும்போது ‘ஓம் சக்தி ஓம் சக்தி’ என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் பூசி நிலை வாசலை வணங்குங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும்போது, பழைய மஞ்சள் துடித்து விட்டு புது மஞ்சள் பூசி குங்குமம் வைக்க வேண்டும். நீங்கள் இந்த வாசல் காலில் பூசக்கூடிய மஞ்சள் அம்பாள் பாதத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மஞ்சளாக இருக்க வேண்டும்.

பிறகு அந்த மஞ்சளால் நிலைவாசல் வாசல் கதவில் “ஓம்” என்ற வார்த்தையை எழுதி வைத்து விடுங்கள். இதை செய்து நிலை வாசல் படியில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்தாலே போதும். வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும், நுழையாது. வார வாரம் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை வீட்டிற்குள் வாசம் நிறைந்த தூபம் போடுங்கள். தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஓம் சக்தி பராசக்தி என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு இருங்கள்‌.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை செல்ல வேண்டும், விளக்கு போடவும். அம்மன் கோவிலில் வைத்த மஞ்சள் குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வரவும். முடிந்தால் அம்மன் பாதத்தில் எலுமிச்சம்பழம் வைத்து கொண்டு வந்து நிலை வாசல் படியில் கட்டிவிடலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் பச்சரிசி பரிகாரம்

ஆனால் அந்த எலுமிச்சம் பழத்தை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கட்ட வேண்டும். அப்போதுதான் அதற்கு உண்டான சக்தி இருக்கும். இப்படி எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்பவர்கள் வீட்டில் நல்லது மட்டும்தான் நடக்கும். கெட்டதற்கு வீட்டில் இடமே இருக்காது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்