துர்க்கை அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும் என்று பலரும் அறிவார்கள். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது துர்க்கை அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
துர்க்கை அம்மன் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும் ஏற்படுத்த தான் செய்யும். அவற்றை சமாளித்து அதிலிருந்து வெளியே வந்து வெற்றி காண்பது தான் வாழ்க்கை. அந்த துன்பங்கள், துயரங்களில் இருந்து வெளியே வருவதற்கு நமக்கு மன தைரியம் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அந்த மன தைரியத்தை அருளக்கூடிய தெய்வமாக தான் துர்க்கை அம்மன் திகழ்கிறார். மேலும் நம் குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெற வேண்டும் என்றால் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலமான 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை வீட்டிலேயே செய்யலாம். ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அவ்வாறு நெய்வேத்தியம் வைப்பதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை மட்டுமாவது பிடித்து அம்மனுக்கு முன்பாக வைக்க வேண்டும்.
பிறகு அம்மனுக்குரிய துர்க்கை அம்மனுக்குரிய இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு 108 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி முடித்துவிட்டு அந்த டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக அருந்த வேண்டும். அசைவம் சாப்பிட்டுவிட்டு இந்த மந்திரத்தை கூறக்கூடாது. ஒருவேளை அன்றைய தினத்தில் அசைவம் சாப்பிட்டிருந்தால் இந்த வழிப்பாட்டை செய்வதற்கு முன்பாக குளித்துவிட்டு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
“ஓம் தும் துர்க்கையே நமஹ”
இதையும் படிக்கலாமே:ஹனுமனை வீடு தேடி வர வைக்கும் மந்திரம்
துர்க்கை அம்மனை முழுமனதோடு இந்த முறையில் வீட்டில் இருந்து கொண்டே ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்பவர்களுடைய குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறுவதோடு மன தைரியத்துடனும் திகழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.