- Advertisement -
Homeஜோதிடம்2025 இல் 12 ராசிக்காரர்களும் கவனம்

2025 இல் 12 ராசிக்காரர்களும் கவனம்

- Advertisement -

வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தங்களுடைய வாழ்க்கையில் பல விதமான மாறுதல்களை கொடுக்கப் போகிறது. இதுவரை உங்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த சில கிரகங்கள் மாற்றம் அடைவதால் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் நிகழும். இந்த 2025 ஆம் ஆண்டு நீங்கள் நினைத்ததை அடைய எந்தெந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்? என்னும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை தான் இப்பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

மேஷம்


மேஷ ராசியில் பிறந்தவர்கள் உங்களை சார்ந்த எல்லா வகையான உறவுகளிடம் இருந்து நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உறவுகளுக்குள் சமநிலை பேணுவது நல்லது. எல்லோரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் நினைத்ததை அடைவீர்கள்.

- Advertisement -

ரிஷபம்


ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நினைத்ததை அடைய சுத்தத்திற்கு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். சுத்தம், சுகாதாரமமுடன் இருப்பது உங்களுடைய வாழ்நாளை அதிகரிக்கும். சிறு சிறு உடல்நல குறைவுகளையும் உடனுக்குடன் கவனியுங்கள், அப்படியே விட்டு விடாதீர்கள். சுகாதாரத்தில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை உங்களின் தரத்தை மென்மேலும் உயர்த்தும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசியில் பிறந்தவர்கள் நினைத்ததை அடைய நட்பு என்னும் உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடன் இருப்பவர்கள் உங்களுடைய உண்மையான நண்பர்களா? இல்லையா? என்பதை நீங்கள் தான் கவனமுடன் இருந்து கையாள வேண்டும். நல்ல நண்பர்களால் இவ்வருடம் நினைத்ததை அடைவீர்கள்.

கடகம்


கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த வருடம் செலவில் கவனம் செலுத்தினால் நினைத்ததை அடையலாம். இஷ்டத்திற்கு செலவு செய்யாமல் வருடம் ஆரம்பித்தது முதலே திட்டம் போட்டு செயல்பட்டால் எட்ட வேண்டியதை எட்டி பிடிப்பீர்கள். வீண் செலவுகளை குறைத்து, வரவை திட்டமிடுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆணவம், கர்வம், தலைகனம் ஆகியவற்றை விடுப்பதில் கவனம் செலுத்தினால் நினைத்ததை அடைவீர்கள். தேவையான இடங்களில் பணிவுடன் நடந்து கொள்வது உங்களை மென்மேலும் உயர்த்தும்.

கன்னி


கன்னி ராசியில் பிறந்தவர்கள் இவ்வருடம் நினைத்ததை அடைய புது உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். இதுவரை உங்களை இறுக்கமாக வைத்திருந்த மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்று புதியதொரு நிலையை அடைவதற்கான வழியை தேர்ந்தெடுங்கள். ஆரோக்கியமான உடலும், மனமும் தான் உங்களை உயர்த்தும்.

துலாம்


துலாம் ராசியில் பிறந்தவர்கள் இவ்வருடம் நேர்மையுடன் இருந்தால் நினைத்ததை அடைவீர்கள். இதுவரை உங்களுக்கு கிரகங்கள் கொடுத்து வந்த துன்பங்களால் நேர்மைக்கு நீங்கள் கொடுத்து வந்த முக்கியத்துவத்தை கணிசமாக குறைத்து இருப்பீர்கள். உங்களின் நேர்மை தான் இவ்வருடம் வெற்றி வாகையை தரும் மறக்காதீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தலைமை பொறுப்பை தட்டி கழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புகளை நீங்கள் ஏற்றால் தான் உங்கள் விருப்பங்களும் நிறைவேறும் என்பதை மறக்கக்கூடாது. சோம்பலை அகற்றி அனைவரையும் தாங்கும் தூணாக நீங்கள் முந்திக் கொண்டு நில்லுங்கள்.

தனுசு


தனுசு ராசியில் பிறந்தவர்கள் இவ்வருடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணக்கூடிய யோகமும் வரும். வீண் சண்டைக்கு போவது, வம்பு சண்டையை வளர்ப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வாயை குறைத்தால் வாழ்க்கை நலமாகும்.

மகரம்


மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வருடம் உடல் நிலையிலும், மனநிலையிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் தான் நினைத்ததை அடைய முடியும். எல்லோரையும் கவனிப்பதில் உங்களை நீங்கள் கவனிக்க மறந்து விடுகிறீர்கள். சுய கவனம், சுயமரியாதையை பெற்று தரும். சுயநலமுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சற்று உங்களுக்காகவும் நேரத்தை செலவிடுங்கள்.

கும்பம்


கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த வருடம் பண விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்துவது நினைத்ததை அடைய வழிவகுக்கும். யாரையும் நம்பி எந்த ஒரு விஷயத்திலும் கண்மூடித்தனமாக இறங்காதீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டு அதன்பின் முடிவெடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான கணிப்பு!

மீனம்


மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த வருடம் கொடுத்து வைத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை நம்பி இருப்பவர்களுக்கு அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்வது, நீங்கள் நினைத்ததை அடைய வகை செய்யும்.

சற்று முன்