- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்

வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்

- Advertisement -

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான கஷ்டங்களும், சோதனைகளும் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. கஷ்டம் வரும்போது எப்போதுமே நம்முடைய மனதை தளர விடக்கூடாது. நம்மை காக்க இறைவன் இருக்கின்றான் என்று நம்ப வேண்டும். கஷ்டமான சமயத்தில் நமக்கு மேல் வசதி படைத்தவர்களை பார்த்து இன்னும் நம்முடைய கஷ்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளக் கூடாது.

நமக்கும் கீழே இருப்பார்கள் அல்லவா, அவர்களைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்ளுங்கள். நம்மை விட கஷ்டப்படுபவர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள். ஆகவே நமக்கு வரும் கஷ்டம் ஒரு கஷ்டமே இல்லை என்று முதலில் கஷ்டத்தில் இருந்து வெளிவர, நம்மை நாமே தயாராக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கஷ்டம் வரும்போது மனது உடைந்து ஒரு இடத்தில் அமர்ந்து விட்டால் பிறகு கஷ்டம் நம்மை மூழ்கடித்து விடும்.

- Advertisement -

சரி உங்களுடைய கஷ்டங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், இன்றைய தினம் வளர்பிறை பஞ்சமி திதியில் வாராஹி அன்னையை எப்படி வழிபாடு செய்வது, எந்த மந்திரத்தை சொன்னால் அந்த வாராகியின் பரிபூரண ஆசி கிடைக்கும், ஆன்மீகம் சார்ந்த ஒரு சில குறிப்புகளை இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வாராஹி வழிபாடு என்றாலே அந்த வழிபாடு மாலை நேரத்திற்குத் தான் உகந்தது என்று சொல்லுவார்கள். காரணம் மாலை நேரத்தில் தான் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இருட்டு அதிகரிக்க அதிகரிக்க, துஷ்ட சக்திகளின் ஆட்டமும் தொடரும். அந்த கெட்ட சக்திகளின் ஆதிக்கத்தை அடக்க வல்லமை கொண்டவள் தான் இந்த வாராஹித்தாய்.

- Advertisement -

முடிந்தால் இன்று மாலை 6:00 மணிக்கு மேல் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். முடியாதவர்கள் வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் இந்த பதிவை பார்த்தவுடன் நின்ற இடத்தில் இருந்தே ஒரு நிமிஷம் கண்களை மூடி, உங்கள் கண் முன்பு வாராகியின் திருவுருவத்தைக் கொண்டு வந்து அந்த தாயின் பாதத்தை தொடுவதாக, மானசீகமாக நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை படித்து விடுங்கள். அவ்வளவுதான்.

வாராஹியின் ஆசி உங்களுக்கு கிடைத்துவிடும். தீராத துன்பங்கள் இன்னல்கள் கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. கண்ணுக்குத் தெரியாமல் உங்களை சூழ்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றலும், உங்களை விட்டு விலகும். காரணம் நீங்கள் வாராகி பாதத்தை பணிந்து வணங்கி இருக்கிறீர்கள். அவள் ஆசி கிடைத்தால் உங்களை பிடித்திருக்கும் துஷ்ட சக்திகள் துண்டு துண்டாக வெடித்து சிதறிவிடும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த பதிவு. அந்த மந்திரம் என்ன என்பதை இப்போது பார்த்து விடுவோம். நம்பிக்கை இல்லாதவர்கள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டாம், மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டாம்.

- Advertisement -

வளர்பிறை பஞ்சமி வாராஹி மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம்
மஹா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே !

இதையும் படிக்கலாமே: ஸ்வர்ணவராகியின் அருள் கிடைக்க

மந்திரத்தை உச்சரித்த உடனேயே உங்கள் மனதிலும், உடலளவிலும் ஒருவிதமான வித்தியாசத்தை உணருவீர்கள். வாராகி தாயே வந்து உங்களுக்குள் அமர்ந்து ஒரு வேலையை செய்வதாக தன்னம்பிக்கையும் தைரியமும் வந்துவிடும். ஒரு முறை இந்த மந்திரத்தை இன்று சொன்னால் கூட போதும். முடியும் என்பவர்கள் மூன்று முறை 27 முறை எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம். நல்லது நினைப்பவர்களுக்கு வாராகி அன்னை நல்லதை மட்டும் தான் செய்வாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்