- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஸ்வர்ணவராகியின் அருள் கிடைக்க

ஸ்வர்ணவராகியின் அருள் கிடைக்க

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒன்று வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் வளர்பிறையை தேர்வு செய்ய வேண்டும். ஏதாவது ஒன்று தேய்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தேய்பிறையை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் வராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி என்பது இந்த முறை ஜனவரி மாதம் நான்காம் தேதி வளர்பிறை பஞ்சமியாக வருகிறது. நம்முடைய செல்வ செழிப்பு அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஸ்வர்ணவராகியின் அருள் கிடைக்க

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயம் நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி ஒவ்வொரு விதமான விஷயத்திற்கும் ஒவ்வொரு விதமான வராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிப்பதற்கு நாம் வழிபடக்கூடிய வராகி அம்மனாக ஸ்வர்ண வராகி திகழ்கிறார். ஸ்வர்ண வராகியை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணத்தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். அப்படிப்பட்ட ஸ்வர்ண வராகியை வளர்பிறை பஞ்சமி அன்று எந்த முறையில் வழிபாடு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஜனவரி மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை பஞ்சமி திதி வருகிறது. இது வளர்பிறை பஞ்சமியாக திகழ்கிறது என்பதால் ஸ்வர்ண வராகியை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஸ்வர்ண வராகி அம்மனை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை 27 முறை முழுமனதோடு உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கும் முன்பாக வீட்டில் எப்பொழுதும் பஞ்சமி வழிபாடு எப்படி செய்வீர்களோ அதே முறையில் செய்து கொள்ளுங்கள்.

பஞ்ச தீபம் ஏற்றுவது, தேங்காய் தீபம் ஏற்றுவது அல்லது ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது போன்றவற்றில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளுங்கள். அதேப்போல் வராஹி அம்மனுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பிறகு ஸ்வர்ண வராகியின் இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு 27 முறை கூறவேண்டும்.

- Advertisement -

இப்படி கூறி முடித்த பிறகு உங்கள் வீட்டிற்கு அருகில் எந்த இடத்தில் எறும்புகள் இருக்கிறதோ அதற்கு பச்சரிசியும் இனிப்பையும் கலந்து தானம் செய்ய வேண்டும். இந்த முறையில் மந்திரம் கூறி எறும்புகளுக்கு உணவை தானம் செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்களும் பண பிரச்சனையும் முற்றிலும் தீரும். மேலும் ஸ்வர்ண வராகியின் அருளால் பணவரவிற்கு எந்தவித தடையும் இருக்காது.

மந்திரம்

“ஓம் வம் வராகியை நமஹ”

இதையும் படிக்கலாமே:கொடுத்த பணத்தை திரும்ப பெற சனிக்கிழமை பரிகாரம்

முழு மனதுடன் ஆத்மார்த்தமாக இந்த ஒரு மந்திரத்தை வராகி அம்மனை நினைத்து வளர்பிறை பஞ்சமி தினத்தன்று கூறுபவர்களுக்கு அவர்களுக்கு இருந்து வந்த பணத்தடைகள் அனைத்தும் விலகி பண வசியம் உண்டாகி பணவரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்