- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டத்தை தேடி வர வைக்கும் மார்கழி சஷ்டி வழிபாடு

அதிர்ஷ்டத்தை தேடி வர வைக்கும் மார்கழி சஷ்டி வழிபாடு

- Advertisement -

மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் சிறப்பு மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆலய வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட திதிகளை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட முக்கியமான திதிகளில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி கிதி. சஷ்டி திதி அன்று எந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மார்கழி சஷ்டி வழிபாடு

ஒருவர் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்பிற்குரிய பலன் அவருக்கு கிடைக்கவில்லை என்றால் உடனே அவருடைய அதிர்ஷ்டத்தை தான் அவர் குறை சொல்லிக்கொள்வார். என்ன நேரத்தில் பிறந்தேனோ, எந்த நேரத்தில் செய்தோமோ இப்படி என்னை வாட்டி வதைக்கிறது என்று புலம்ப ஆரம்பிப்பார். இன்னும் சிலரோ எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பார்கள். அவர்களைத் தேடி வாய்ப்புகள் வரும். அவர்களை பார்த்ததும் பலரும் சரியான மச்சக்காரன் டா நீ அதிர்ஷ்டசாலிடா என்று கூறுவார்கள். அதிர்ஷ்டம் என்பது நம்மை தேடி வர வேண்டும். அப்பொழுதுதான் அதை நாம் அதிர்ஷ்டம் என்று கூறுவோம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி ராகு காலம் எமகண்ட வேளை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். அன்றைய தினம் முழுவதும் சஷ்டி திதி இருப்பதால் நாம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சமம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துரதிஷ்டத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அந்த சூட்சுமம் என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

முருகப் பெருமானின் ஆலயத்திற்கு செல்லும் போது பலரும் முருகப்பெருமானுக்காக மலர்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். இன்னும் சிலர் அபிஷேக பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். இப்படி வாங்கிக்கொண்டு செல்வதோடு வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடிய வேலையும் கையில் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று வேலை கையில் வைத்துக் கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு திரும்பவும் நம்முடைய வீட்டு பூஜை அறையில் அந்த வேலை கொண்டு வந்து வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அனைவரின் இல்லங்களிலும் வேல் வைத்து வழிபாடு செய்யும் முறை என்பது இருக்காது. அப்படிப்பட்டவர்கள் முருகனின் ஆலயத்திற்கு செல்லும் போது ஒரு சிறிய பாட்டிலில் தேனை வாங்கிக்கொண்டு செல்லுங்கள். அந்த தேனை நம் கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு கொண்டு வந்து முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அந்த தேன் அப்படியே இருக்கட்டும். மறுநாள் அந்த தேனை வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும்.

இந்த முறையில் நாம் சஷ்டி திதி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும், சங்கடங்களும், துரதிஷ்டமும் நீங்கி அதிர்ஷ்டம் நம்மை தேடி வர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க பஞ்சமி பரிகாரம்

எந்த ஒரு வழிபாட்டையும் தாந்திரீகத்தையும் முழு மனதோடு செய்தோம் என்றால்தான் அதற்குரிய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். முழு மனதுடன் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று இந்த முறையில் வழிபாடு செய்து விட்டு வாருங்கள். அதிர்ஷ்டம் உங்கள் பின்னால் உங்கள் வீட்டைத் தேடி வர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்