நிறைய முருக பக்தர்கள் தங்களுடைய அனுபவத்தைச் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். என்னுடைய கனவில் முருகன் வந்தான், இந்த வழிபாட்டை செய்ய சொன்னான் எங்களுடைய கஷ்டம் அன்றிலிருந்து தீர்ந்தது. முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்த நாள் முதல் எங்கள் வாழ்க்கை ஓஹோ என மாறிவிட்டது என்று சொல்லுவார்கள்.
முருக பக்தர்களுக்கு முருகன் நடத்திய அதிசயங்கள் ஏராளம். இதையெல்லாம் சொல்லும்போது சில பேர் நம்ப மாட்டாங்க. ஆனால் அனுபவபூர்வமாக உணரும்போது முருகனின் சக்தி என்ன என்பது புரியும். உங்களுக்கும் வாழ்வில் தீராத கஷ்டம் இருக்கிறதா. உங்களுடைய கனவிலும், நீங்கள் முருகனை தரிசனம் செய்ய வேண்டுமா என்று நினைப்பவர்களாக இருந்தால், இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பாடலை படித்துப் பாருங்கள்.
உண்மையான பக்தியோடு படிப்பவர்களுக்கு நிச்சயம் முருகன் ஏதாவது ரூபத்தில் உங்கள் வாழ்க்கைக்கு உண்டான நல்லதை செய்வான். அந்த பாடல் என்ன, அந்த பாடலை எப்படி படிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இன்று இந்த பாடலை படிக்க என்ன காரணம். இன்று மார்கழி மாதத்தில் வந்திருக்கக்கூடிய வளர்பிறை சஷ்டி திதி. இது முருகப்பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் மட்டுமல்ல, எந்த நாளில் முருகனை கூப்பிட்டாலும் நிச்சயம் அவன் வருவான். இருந்தாலும் அவனுக்கு உரிய திதியில், அவன் பாடலை படிப்பது கூடுதல் நன்மை தானே. அதற்காகத்தான்.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கண்களை மூடிக்கொள்ளுங்கள். முதுகுத்தண்டுவடத்தை நேராக வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். மன கண் முன்னே முருகப்பெருமானை கொண்டு வந்து விடுங்கள். முருகனின் எந்த உருவம் உங்களுக்கு பிடிக்குமோ, திருச்செந்தூர் முருகனா, திருத்தணி முருகனா, பழனி ஆண்டவனா, எந்த முருகன் உங்களுக்கு பிடிக்குமோ அந்த முருகனை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துங்கள்.
எந்த முருகனை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இந்த மந்திரத்தை சொல்ல போகிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவு செய்தால் இன்னும் இன்னும் நல்லது. பிறகு முருகனை இந்த மந்திரத்தை இந்த பாடலை பாடி அழையுங்கள். நீங்கள் இன்று படிக்க வேண்டிய முருகன் பாடல் இதோ
முருகனை அழைக்கும் பாடல் வரிகள்
அப்பா முருகா வருவாயே
ஆனந்தத் தேனே வருவாயே!
கண்ணின் மணியே வருவாயே கார்த்திகேயா வருவாயே!
செல்வக் குமரா வருவாயே
செந்தில் வேலவா வருவாயே!
கந்தா முருகா வருவாயே
கௌரி தனயா வருவாயே!
வெற்றி வேலா வருவாயே
வினைகள் தீர்க்க வருவாயே!
வேல் வேல் முருகா வருவாயே
வெற்றிகள் யாவும் தருவாயே!
முருகன் பாடலை படித்து விட்டு அப்படியே கண்களை மூடி முருகனை மனதில் நிறுத்தி உறங்குங்கள். தூக்கம் கண்களை தழுவும். முருகன் பாடலை படிப்பதற்கு முன்பாக என்ன வேண்டுதல் வேண்டும் என்றாலும் முருகனிடம் நீங்கள் கேட்கலாம். நீங்கள் வேண்டிய வரத்தை தட்டாமல் அவன் கொடுக்க நிச்சயம் உங்கள் கனவில் வரத்தான் போகின்றான்.
இதையும் படிக்கலாமே: கர்ம வினைகளை நீக்கி தலையெழுத்தை மாற்றும் வழிபாடு
நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை இன்று இரவு செய்து பாருங்கள். இன்று முருகன் கனவில் வரவில்லையா, கவலைப்படக்கூடாது. நம்பிக்கையோடு தினமும் உங்களால் இந்த பாடலை படிக்க முடியும் என்றால், தினமும் தூங்க செல்வதற்கு முன்பு முருகனை அழைத்து இந்த பாடலை படியுங்கள். முருகன் நிரந்தரமாக உங்கள் மனதில் குடியேறுவான். நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு காட்சியும் தருவான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.