எல்லோருக்கும் தான் நினைத்தபடி வாழ்க்கை அமைவதில்லை. அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சிக்கு உரியதாய் மாற்றிக் கொள்ளவும் யாருக்கும் துணிவு இல்லை. வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கிற கவலையில் எப்போதும் தவிப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்தால் அதிலிருந்து மீண்டு பயம் நீங்கி நம்பிக்கை பிறக்கும். வாழ்க்கை பயம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் காண்போம் வாருங்கள்.
அந்தந்த வயதில் நடக்க வேண்டிய எல்லாமே நடந்து விட்டால், நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் என்பது ஏற்படுவது இல்லை. ஒரு சில விஷயங்கள் நம் வயது கடந்து நமக்கு கிடைக்காமலேயே தள்ளி சென்று கொண்டே இருக்கும். அப்படி நடக்கும் பொழுது தான் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கிற பயமும் ஏற்பட துவங்குகிறது. இந்த பயம் நீங்கி புது நம்பிக்கையும் தெம்பும், உற்சாகமும் தொற்றிக் கொள்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தான் பார்க்க இருக்கிறோம்.
குலதெய்வம் மற்றும் பித்ருக்கள் உடைய ஆசீர்வாதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பயம் இருப்பதில்லை. இவ்விருவரில் ஒருவருடைய ஆசீர்வாதம் கிடைக்காதவர்களும், கர்ம பிடியில் அகப்பட்டு தவிப்பவர்களும் வாழ்க்கை பற்றிய கவலையில் எப்போதும் மூழ்கி கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பொதுவாக குலதெய்வ மற்றும் பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்க பசு மாடுகளுக்கு தானம் செய்தால் போதுமானது.
பசுவிற்கு செய்யும் தானம் பலவிதமான தோஷங்களை போக்க வல்லது. அதிலும் பித்ரு தோஷத்தை போக்க இந்த பரிகாரம் நல்ல பலன் தருகிறது. அது போல வாழ்க்கை பற்றிய பயமோ, மரண பயமோ இருந்தால் நீங்கள் எருமை மாடுகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் தானம் செய்ய வேண்டும். மகம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் கோசாலைக்குச் சென்று அங்குள்ள எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரையை தானமாக வழங்க வேண்டும். எருமை சனி பகவானின் வாகனம் ஆகும். எருமை மாடு சனி பகவானின் அம்சமாக இருப்பதால், மகம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் எருமைக்கு அகத்திக்கீரை வழங்க சகல விதமான தோஷங்களும் நீங்கி, நமக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பயம் நீங்கும், வாழ்க்கை பற்றிய பயமும் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஒரு நல்ல விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது எருமை இடைப்பட்டால் போகின்ற காரியம் தாமதமாக முடியும் என்று சொல்லுவார்கள். எருமை சனி பகவானின் வாகனம் என்பதால் சனி பகவான் எல்லாவற்றையும் தாமதப்படுத்துபவர். அவர் மிகவும் மந்தமானவர் அதனால் தான் செல்லும் காரியமும் தாமதப்படும் என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது.
இதையும் படிக்கலாமே:
11-1-2025 சனி மகா பிரதோஷம் 2025
ஒவ்வொரு மகம் நட்சத்திரம் அன்றும், எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரையுடன் தீவனம் அளிக்க இனிவரும் காலங்கள் வசந்தகாலமாக அமையும். உங்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். மனதில் புது தெம்பும், உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் அனைவரும் விலகி செல்வார்கள். விரக்தி மனப்பான்மை நீங்கி தெளிவு உண்டாகும். ஒரு சனிக்கிழமையில் முடிந்தால் திருநள்ளாறு சென்று வழிபட்டு வாருங்கள். 9 சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் நவகிரக சன்னதிக்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டாலும் பயம் நீங்கி நம்பிக்கை பிறக்கும்.