தனுசு ராசியில் இருக்கும் சூரியன், தை 1ஆம் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சியாகி விடுவார். இந்த நாளை தான் நாம் மகர சங்கராந்தி என்று சொல்லுகின்றோம். இந்த நாள் தை திருநாள்., தைப்பொங்கல் என்றும் கொண்டாடுகின்றோம். இந்த தை ஒன்றாம் தேதி, சூரியன் பெயர்ச்சியான பிறகு, எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், என்பதை பற்றித்தான் இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளபோகின்றோம்.
மகர சங்கராந்தி பலன்
தை மாதம் பிறந்த பிறகு ஆறு நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தை தொடங்கி சித்திரை மாதம் வரை இந்த பலன் உங்களுக்கு வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, பங்குனி, சித்திரை. 4 மாதங்கள் சில விஷயங்களை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அந்த நட்சத்திரக்காரர்கள் யார் யார் என்பதை பார்த்து விடுவோம். சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, திருவாதிரை, புனர்பூசம், பூசம். இந்த ஆறு நட்சத்திரக்காரர்கள் அடுத்து வரக்கூடிய நான்கு மாதங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதை தன நாசம் என்று ஜோதிட ரீதியாக சொல்கிறார்கள். ஆகவே நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். எங்கேயாவது சீட்டு போடுவதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த நான்கு மாதத்தில் பணம் நஷ்டம் ஆகாமல் இருக்க வேண்டும் நீங்கள் யாரிடமும் ஏமாற இருக்க வேண்டும் என்றால், இந்த பிரச்சனைகள் எல்லாம் வராமல் தவிர்க்க வேண்டும் என்றால், இந்த நான்கு மாதமும் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பசு மாட்டிற்கு தானம் செய்யலாம்.
பசு வைத்திருப்பவர்களுக்கு எள்ளு புண்ணாக்கு அல்லது வாழைப்பழம் வைக்கோல் அந்த பசுவிற்கு என்ன தேவை என்று, அந்த பசு வைத்திருக்கும் உரிமையாலரிடம் கேட்டாலே சொல்லுவாங்க. அதை வாங்கி முடிந்த அளவு தானம் செய்யுங்கள். வியாழக்கிழமை தோறும் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமை வீட்டில் மகாலட்சுமி மந்திரங்கள், மகாலட்சுமி அஷ்டோத்திரங்களை ஒலிக்க விடுவது சிறப்பான பலனை கொடுக்கும்.
சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க ரீதியாக நீங்கள் ஏதாவது வேலை செய்கிறீர்கள், அல்லது உங்களுக்கு தேவையான விஷயங்களை அரசாங்கத்திடம் போய் கேட்கிறீர்கள், அப்படி இருக்கும் பட்சத்தில் நேர்வழியில் நடந்து கொள்ளுங்கள்.
குறுக்குப் பாதையில் செல்ல வேண்டாம். அரசாங்க அதிகாரிகளிடம் ஏதேனும் கையொப்பம் வாங்க வேண்டும் என்றாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் நீங்கள் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு விளக்கு போடுவது ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்வது இது போன்ற பரிகாரங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடிய இந்த பிரச்சனைகளை தடுத்து நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பொங்கல் பண்டிகை அன்று செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது.
மற்ற நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் கெடுதல் நடக்கும் என்பது அர்த்தம் கிடையாது. கொஞ்சம் ஜாக்கிரதையாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு. இந்த மகர சங்கராந்தியில் மேலே சொல்லப்பட்ட இந்த விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவினை தயவு செய்து கொள்வோம்.