- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெவ்வாய்க்கிழமையில் பிறக்கும் தை அமாவாசை திதி பரிகாரம்

செவ்வாய்க்கிழமையில் பிறக்கும் தை அமாவாசை திதி பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் 29-1-2025 தை மாதம் 16ஆம் தேதி அமாவாசை திதி வரவிருக்கிறது. முன்னோர்களுக்கான வழிபாட்டை நாளைய தினம் தான் செய்யவிருக்கின்றோம். இருப்பினும் அமாவாசை திதியானது இன்று 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8:10 மணிக்கு பிறந்துவிடுகிறது. இந்த செவ்வாய் ஓரையில், தை அமாவாசை திதி பிறப்பது என்பது மிகவும் அற்புதம் வாய்ந்த பலன்களை நமக்கு கொடுக்கக் கூடிய நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். செவ்வாய்க்கிழமை என்றால் கடன் சுமையை தீர்ப்பதற்கு உகந்த நாள். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் கடனை திருப்பிக் கொடுத்தால் நம்முடைய கடன் விரைவாக அடையும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தை நாம் தவறவிடலாமா. முருகனை நினைத்து வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய கடன் தீர்க்கும் வழிபாடு என்ன, முருகனை நினைத்து சொல்ல வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு

செவ்வாய் கிழமை இன்று, இரவு 8:10 மணிக்கு மேலே பூஜையறையில் முருகர் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெற்றிலையில் உங்களுடைய கடன் சுமை அடைய வேண்டும் என்று எழுதி, முருகனது திருவுருவப்படத்தில், பாதத்தின் கீழ் வைத்துவிட்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, அரோகரா அரோகரா அரோகரா” என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.

அரோகரா மந்திரம் முருகனுக்கு உகந்த மந்திரம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இரவு அமாவாசை திதி பிறந்ததும் செவ்வாய் ஹோரையில் அரோகரா நாமத்தை சொல்லுபவர்களுக்கு அமோக வெற்றி தான்.

- Advertisement -

நிச்சயமாக உங்களுடைய பண கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரை ஆனது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இருக்கிறது. அமாவாசை திதி செவ்வாய்க்கிழமை இரவு 8:10 க்கு பிறப்பதால், நீங்கள் 8:15க்கு மேல் இரவு 9:00 மணிக்குள் இந்த வேண்டுதலை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த செவ்வாய் ஹோரையில் முடிந்தால் உங்களுடைய கடனிலிருந்து ஒரு தொகையை திருப்பிக் கொடுக்கலாம். இந்த செவ்வாய் ஹோரையில் வாங்கிய கடனை அடைத்தால் கடன் பிரச்சனை சீக்கிரம் தீரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களால் முடியும் என்றால் முருகனுக்கு உகந்த வெற்றிலை தீபம், 6 வெற்றிலையில், 6 விளக்குகளை ஏற்றி வைத்து, இந்த நேரத்தில் கடன் சுமை குறைய வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்தாலும், அந்த வேண்டுதல் உடனே நடக்கும். ஏனென்றால் அதி சக்தி வாய்ந்த நிறைய நல்ல விஷயங்கள் இந்த நேரத்திற்கு பின்னால் மறைந்திருக்கிறது என்பதற்காகத்தான் இந்த வழிபாட்டை வலியுறுத்தி சொல்லுகின்றோம்‌.

இதையும் படிக்கலாமே: ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்

ஒரு சில அதிசயமான நேரமும் காலமும் ஒரு சில நாட்களில் மட்டும் தான் நமக்கு வரும். அதை தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு நமக்கு ஒரு சில நேரங்களில் மட்டும் தான் அமையும். இன்றைய தினம் இந்த வாய்ப்பை தவற விடாதீங்க. வேலைக்கு போறீங்க ரொம்ப பிசியா இருக்கீங்க அப்படின்னா கூட, இந்த நேரத்தில் முருகனை மனதார நினைத்து, மானசீகமாக விளக்கு ஏற்றியதாக நினைத்துக் கொண்டு, “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று ஒரு முறை சொல்லுங்கள். வெற்றி உங்கள் பின்னால் வரும் கடன் சுமை குறையும் வாழ்வில் நிறைய நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்