- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகொடுத்த பணம் திரும்ப கிடைக்க சனிக்கிழமை பரிகாரம்

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க சனிக்கிழமை பரிகாரம்

- Advertisement -

ஒருவருக்கு நாம் பணத்தையோ, நகையையோ, பொருளையோ கொடுக்கிறோம் என்றால் அவர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில் தான் தருவோம். அப்படிப்பட்ட நம்பிக்கையை ஏதோ ஒரு சூழ்நிலையில் தந்த பணத்தையோ பொருளையோ நகையோ திருப்பி தராமல் இருக்கும் பட்சத்தில் அதனால் நமக்கு மிகவும் மன வேதனை உண்டாகும். அந்த மனவேதனையை தீர்த்து கொடுத்த பணத்தையும் நகையோ பொருளையோ திரும்ப பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு சனிக்கிழமை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்

ஒருவர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில் அவருடைய கஷ்டத்தில் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நாம் செய்யக்கூடிய ஒரு உதவியானது திரும்பவும் நமக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் அதனால் மன வருத்தமும் மனவேதனையும் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக பணத்தையும் நகையையும் கொடுத்து உதவி செய்திருந்தோம் என்றால் அந்த பணத்தையும் நகையையும் திரும்ப பெற வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். ஒரு சிலர் அதை தரக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் இருப்பார்கள், இன்னும் சிலர் அவர்களிடம் பணம் இருந்தாலும் அதை திருப்பித் தரக் கூடாது, ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் இருப்பார்கள். எப்படிப்பட்ட நோக்கத்தில் இருப்பவராக இருந்தாலும் அவருக்கு பணவரவை ஏற்படுத்தி அந்த பணத்தை நம்மிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அந்த அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் சனிக்கிழமை அன்றுதான் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ச்சியாக 8 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும். இதற்கு இரண்டு பொருட்கள் தான் வேண்டும். ஒன்று பசுந்தயிர், மற்றொன்று கருப்பு உளுந்து. வெள்ளிக்கிழமை அன்று இரவே ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து இரண்டு ஸ்பூன் அளவு போட்டுவிட்டு அது மூழ்கும் அளவிற்கு தயிரை ஊற்றி மூடி வைத்து விடுங்கள்.

சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் போல் சுவாமி கும்பிட்டு விட்டு நம் ஊற வைத்திருந்த அந்த கருப்பு உளுந்தை எடுத்துக்கொண்டு அருகில் அரச மரம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். சனிக்கிழமை அன்று அரச மரத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணு குடியிருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

- Advertisement -

அப்படிப்பட்ட சனிக்கிழமை அன்று அரச மரத்தடியில் நாம் எடுத்துச் சென்று இந்த தயிர் கருப்புழுந்தை அரச மரத்தின் வேரில் படும்படி போட்டுவிட்டு கற்பூரத்தை ஏற்றி வைத்து இன்னாரிடம் நான் பணம் கொடுத்தேன். அந்த பணம் எனக்கு திரும்ப வர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 8 வாரங்கள் சனிக்கிழமை தோறும் செய்பவர்களுக்கு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் அவர்கள் கொடுத்த பணம் திரும்ப வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு

மகா விஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கும் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கும் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்