- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு

சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு

- Advertisement -

சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய சில ஆன்மீக தகவல்கள், முருகர் பக்தர்களுக்காக முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, இணையான சக்தி சென்னையில் இருக்கும் இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் முருகருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த செந்தில் ஆண்டவன் நினைத்தால் தான், திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய முடியும்.

அதே போல் தான், இந்த முருகன் நினைத்தால் மட்டும் தான், சென்னையில் இருக்கும் இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் நம்மால் செல்ல முடியும். அது மட்டுமில்லாமல் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே, உங்களுக்கும் அந்த செந்தில் ஆண்டவனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்று தான் அர்த்தம். நிறைய பேர் திருச்செந்தூர் செல்ல வேண்டும்.

- Advertisement -

தோஷங்கள் விலக வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், வேலை வியாபாரம் நல்ல முன்னேற்றத்தோடு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் திருச்செந்தூர் செல்வதற்கான காலமும் நேரமும் கைகூடி வராது. கவலைப்படாதீங்க. சென்னையில் இருக்கும் இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, இந்த முருகப்பெருமானை வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். திருச்செந்தூருக்கு சென்று அந்த செந்தில் ஆண்டவனை தரிசனம் செய்யக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.

சென்னை திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு:

இந்த கோவிலில் பணிபுரியும் குருக்கள், பக்தர்களுக்கு நடந்த நிறைய அதிசயங்களை சொல்லுகிறார்கள். அந்த செய்திகள் எல்லாம் மிகவும் வியப்படைய வைக்கிறது. இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வேண்டுதல் அப்படியே பலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் ஒரு சிறப்பு பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்து, இந்த கோவில் கொடி மரத்திற்கு அடியில் வைத்து வேண்டிக் கொண்டால் நீங்கள் நினைத்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறுமாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்ய வேண்டும் தெரியுமா. உங்கள் வீட்டில் பூஜை அறையில் முதலில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மஞ்சள் தூளில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து இந்த கலவையில் வெள்ளை துணியை நனைத்து, நிழலிலேயே உலர வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் துணியில் 1 ரூபாயை வைத்து, குலதெய்வத்தை நினைத்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். உங்களுடைய வேண்டுதல் என்ன என்பதையும் முருகப்பெருமானிடம் சொல்லி, இந்த முடிச்சை தயார் செய்து கொள்ளுங்கள்.

சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்போது இந்த முடிச்சையும் கையோடு எடுத்துச் சென்று, இந்த கோவிலில் இருக்கும் கொடி மரத்துக்கு அடியில் அந்த முடிச்சை வைத்து, உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் சொல்லி வேண்டிக்கொண்டு, இந்த முடிச்சை மீண்டும் கொண்டு வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். உங்களுடைய வேண்டுதல் நிறைவடைந்த பிறகு அந்த முடிச்சை கொண்டு போய் திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் அல்லது சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் செலுத்தலாம்.

- Advertisement -

திருச்செந்தூரில் இருக்கும் முருகன் கோவிலில் என்ன விசேஷ தினங்கள் எல்லாம் கொண்டாடப்படுகிறதோ அதெல்லாம், சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் மிக விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சூரசம்காரம் செய்வது, பால் குடம் எடுப்பது, தைப்பூச விசேஷம், வைகாசி விசாகம், சஷ்டி விரதம் என்று என்னென்ன விசேஷங்கள் எல்லாம் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கிறதோ, அதே போல சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் முருகனுக்கு உண்டான அனைத்து விசேஷ தினங்களிலும், விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

நீங்கள் சென்னையில் இருப்பவர்களாக இருந்தாலும் சென்னைக்கு அருகில் இருப்பவர்களாக இருந்தாலும் இந்த கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய தவற விடாதீர்கள். சரி இந்த முருகன் கோவில் சென்னையில் எந்த இடத்தில் இருக்கிறது.

கோவில் முகவரி:

காமராஜர் தெரு, பொன்னம்பலம் காலனி,
கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர்,
நெசப்பாக்கம். சென்னை 6000 78.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

உங்களுடைய கஷ்ட காலம் தீர வேண்டும் என்பதற்காகத்தான் முருகர் இந்த கோவிலை பற்றிய தகவலை உங்களுக்கு நினைவு படுத்தி இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளுக்கு எளிமையாக தீர்வு காணுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்