ஒரு ரூபாய் சம்பாதிக்கக்கூடிய இடத்தில், 10 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதர்களுடைய எண்ணத்திலும் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது. முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில்லை. சம்பாத்தியம் இன்னும் குறையுமே தவிர, சம்பாத்தியத்தில் முன்னேற்றம் என்பது இருக்காது. சின்ன வயதில் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் சுற்றி திரியும் காலம் கடந்த பிறகு, வாழ்வில் பொறுப்புகள் வந்து, கஷ்டப்பட்ட பின்பு தான் சிந்திப்போம்.
படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் விட்டுவிட்டோமே, கஷ்டப்பட வேண்டிய காலத்தில் கஷ்டப்படாமல் விட்டு விட்டோமே, என்று எண்ணாத மனிதர்களே இந்த பூமியில் கிடையாது. காலம் நமக்கு எல்லாவற்றையும் உணர்த்துகிறது. காலத்தால் நமக்கு கொடுக்கப்படும் அந்த கஷ்டத்தை தீர்க்கக் கூடிய சக்தி கால பைரவருக்கு மட்டும்தான் இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்கள் வெற்றியடைய துடிப்பவர்கள் நாளை இரவு இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் மேற்கொள்ளலாம்.
வளர்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாடு
நாளை இரவு 7 மணிக்கு மேல் இந்த பைரவ பரிகாரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்யலாம். 8 மண் அகல் விளக்குகள் எடுத்து வரிசையாக வைத்து, அல்லது வட்ட வடிவில் வைத்து நல்லெண்ணெயில் திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த எட்டு அகல் விளக்குக்கு பின்பும் ஒவ்வொரு எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும். பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எல்லா வெற்றியும் என்னை தேடி வர வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். காலத்தால் கொடுக்கப்படும் கஷ்டங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, உங்களுக்கு தேவையான வரங்களை பைரவர் மூர்த்தியிடம் கேட்டு, இந்த மந்திரத்தை 8 முறை சொல்லுங்கள்.
பைரவ மந்திரம்
ஓம் வெற்றிகள் அருளும் கால பைரவா போற்றி போற்றி !
பிறகு உங்களால் முடிந்த நெய்வேதியத்தை பைரவருக்காக பூஜை அறையில் வைத்து, தீப தூப ஆராதனை காண்பது வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அந்த தீபங்கள் எல்லாம் எண்ணெய் தீரும் வரை எரிந்து முடியட்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
கையில் 5 எலுமிச்சம் பழங்களை வைத்துக்கொண்டு குல தெய்வத்தையும் பைரவரையும் நினைத்து வீட்டிற்குள், வெற்றி வந்து சேர வேண்டும், வீட்டிற்குள் எந்த கெடுதலும் வரக்கூடாது, கண் திருஷ்டியும் நுழையக்கூடாது, என்று ஒரு மஞ்சள் துணியில் வைத்து ஐந்து எலுமிச்சம் பழங்களையும் முடிச்சாக கட்டி நிலை வாசலில் கட்டி விடுங்கள்.
மீதம் இருக்கும் எலுமிச்சம் பழத்தில் இரண்டு எலுமிச்சம் பழத்தை அறுத்து நிலை வாசலில் இரண்டு பக்கமும், குங்குமம் மஞ்சள் தடவி வைத்து விட வேண்டும். மீதம் இருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சுற்றி, இரண்டாக அறுத்து, வீதியில் வீசி விட வேண்டும். இந்த எளிமையான பரிகாரம் உங்களை கஷ்டத்திலிருந்து காப்பாற்றும். வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் வெளியே இழுத்து தள்ளிவிடும்.
இதையும் படிக்கலாமே: சாப்பிடும் பொழுது மறந்தும் செய்யக்கூடாதவை
வீட்டிற்குள் எந்த கட்ட சக்தியும் நுழையாமல் பார்த்துக் கொள்ளும். பைரவரின் அருளை முழுமையாக உங்களுக்குப் பெற்றுத் தரும் நிலை வாசலில் கட்டி இருக்கும் எலுமிச்சம் பழம் 48 நாளைக்கு பவராக இருக்கும். அதன் பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை கழட்டி ஓடுகின்ற தண்ணீரிலோ, கால் படாத இடத்திலோ போட்டு விடவும். இவ்வளவுதான் பரிகாரம். நாளைய வளர்பிறை அஷ்டமி திதியில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.