மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள், தாமதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பேச்சை முழுசாக நம்ப கூடாது. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபத்தை வெளிப்படுத்தாதீங்க. புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். எதிர்பார்த்த அளவு நல்ல முன்னேற்றங்கள் வரும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுபகாரிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக் கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். அவசரப்பட்டு வாயை எந்த இடத்திலும் திறக்கவே கூடாது. சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். உறவுகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். யார் என்ன சொன்னாலும் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு, இன்று மௌனவிரதம் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு தேவையற்ற டென்ஷன்கள் விளங்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. யாரையும் நம்பாதீர்கள். கடன் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். யாரை நம்பியும் உங்களது உடைமைகளை ஒப்படைக்க வேண்டாம். பேருந்தில் பயணம் செய்பவர்கள். ஜாக்கிரதியாக இருக்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். வீட்டில் பிரிந்து சென்ற உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். ஆக மொத்தத்தில் இன்று சுகமான நாளாக இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு நடந்து கொள்வீர்கள். எதிலும் ஒரு தெளிவு இருக்கும். குழப்ப நிலையில் இருந்து வெளி வருவீர்கள். வியாபாரத்திற்கும் வேலைக்கும் என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வீர்கள். எதிர்கால சேமிப்பு உயரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்து பார்க்காத அளவுக்கு நன்மைகள் நடக்கும். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்த இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். எதிரிகளிடம் உறவுகளிடம் இருந்து வந்த தேவையற்ற மன கசப்புகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதையும் கூடும். இழந்த சொத்துக்கள் நகைகளை மீட்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. கணவன் மனைவி உறவு மேம்படும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் மீண்டும் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நடக்காது என்ற காரியத்தை நடத்தி காட்டுவீர்கள். மனமகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இன்று மாலை உடல் அசதி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.