- Advertisement -

சாம்பிராணி தூப பலன்

- Advertisement -

நல்ல நறுமணம் வீசக்கூடிய இடத்தில் நல்ல சக்திகள் அதிகரிக்கும் என்றும் தீய சக்திகள் விலகி ஓடும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நம்முடைய வீட்டில் அனுதினமும் ஊதுபத்தி காட்ட வேண்டும், அதேபோல் சாம்பிராணி தூபம் போட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பலரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இந்த சாம்பிராணி தூபத்தை எந்த முறையில் எந்தெந்த நாளில் போட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சாம்பிராணி தூப பலன்

சாம்பிராணி தூபம் போடுவதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் அருளை பெறுவதற்கும் ஒவ்வொரு விதமான பொருட்களை சாம்பிராணியில் போட்டு தூபம் காட்டும் வழக்கம் என்பது இருக்கும். அதிலும் குறிப்பாக செல்வ வளத்தை தரக்கூடிய மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்றால் சாம்பிராணி உடன் சில குறிப்பிட்ட மூலிகை பொருட்களையும் சேர்த்து தூபம் போடுவார்கள். இப்படி எல்லாம் போடாமல் மிகவும் எளிமையான முறையில் சாம்பிராணி தூபம் போட்டால் கூட நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அந்த நன்மைகளை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக சாம்பிராணி தூபத்தை சூரிய உதயம் ஆகுவதற்கு முன்பாக வீட்டில் போட வேண்டும். காலையில் அப்படி போட இயலவில்லை என்பவர்கள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு போட வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி போடக்கூடிய சாம்பிராணியில் கண்டிப்பான முறையில் வெள்ளை குங்கிலியமும் வெண்கடுகும் இருக்க வேண்டும். இவை இரண்டை மட்டுமே வைத்து கூட நாம் தூபம் போடலாம். வெள்ளை குங்கிலியத்தை பொடி செய்து போடவேண்டும். வெண்கடுகை அப்படியே போட வேண்டும். சரி இந்த தூபத்தை நாம் போடுவதால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்வோமா?

ஞாயிற்றுக்கிழமை தூபம் போடுவதன் மூலம் நம்முடைய ஆன்ம பலம் அதிகரிக்கும், செல்வாக்கும், புகழும் உயரும், மேலும் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். திங்கட்கிழமை சாம்பிராணி தூபம் போடுவதன் மூலம் நம்முடைய மனப்பலம் அதிகரிக்கும், மன அமைதி கிடைக்கும், மேலும் அம்பாலின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். செவ்வாய்க்கிழமை தூபம் போடுவதன் மூலம் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும், நம்முடைய கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும், அதோடு மட்டுமல்லாமல் முருகப் பெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

புதன்கிழமை தூபம் போடுவதன் மூலம் நமக்கு துரோகம் செய்பவர்கள் மற்றும் சூழ்ச்சி செய்பவர்கள் விலகி ஓடுவார்கள், நாம் செய்யக்கூடிய வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும், சுதர்சனரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வியாழக்கிழமை தூபம் போடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு செல்வ மேன்மை அதிகரிக்கும், அதே போல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாவதோடு, குருபகவான் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை தூபம் போடுவதன் மூலம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும், தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும், படிக்கின்ற பிள்ளைகள் சிறப்பாக படிப்பார்கள், மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சனிக்கிழமை தூபம் போடுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய சோம்பல் விலகும், எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் ஆர்வம் அதிகரிக்கும், மேலும் பெருமாளின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:செல்வ கடாட்சம் பெருக

பலவிதமான பொருட்களை போட்டு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் என்று இல்லாமல் இந்த இரண்டு பொருட்களை மட்டுமே தினமும் காலையிலும் மாலையிலும் நம் வீட்டு பூஜை அறையில் மட்டுமாவது தூபம் காட்டினோம் என்றாலேயே மேற்சொன்ன அனைத்து பலன்களும் நமக்கு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்