- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் அடைய வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

கடன் அடைய வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

கண்ணுக்கு தெரியாத ஏதாவது அதிசயம் நடந்தால் தான் இந்த பண பிரச்சனையில் இருந்து என்னால் விடுபட முடியும். தவிர வேறு எந்த வழியும் எனக்கு கிடையாது. சொத்து கிடையாது, கடனை அடைக்கும் அளவுக்கு வருமானம் வரவில்லை, நகையும் இல்லை. ஆனால் கடன் மட்டும் தகுதிக்கு மீறி வாங்கி, செலவு செய்து விட்டோம். ஏதோ ஒரு காரணம் இருக்கும்.

குழந்தைகளுடைய படிப்பு செலவு, திடீரென்று வந்த மருத்துவ செலவு, இப்படி எதற்காகவோ, கெட்ட நேரத்தில் கடனை வாங்கி, செலவு செய்து விட்டோம். திருப்பி அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கிய கடன் அதெல்லாம். ஆனால் இன்றைய சூழ்நிலை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இக்கட்டான சூழ்நிலை வந்துவிட்டது கடனை திருப்பி அடைக்க முடியும் என்று நம்பிக்கையும் இல்லை.

- Advertisement -

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நான் வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது. இக்கட்டான சூழ்நிலைகளை கொடுப்பது நம்முடைய கர்ம வினைகள் தான். நாம் செய்த பாவங்கள் தான். பாவத்தை இந்த ஜென்மத்தில் செய்திருக்க மாட்டோம். ஏதோ ஜென்மத்தில் செய்த கர்ம வினை நம்மை துரத்தி அடித்து, இந்த நிலைமைக்கு கொண்டு வந்து தள்ளி இருக்கிறது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அன்னதானம் செய்வது மட்டும்தான் ஒரே வழி. அன்னதானம் செய்வதா? அன்றாட பிழைப்புக்கே வழி இல்லை. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தான் கஷ்டத்தில் தவித்து வருகின்றோம். நாங்கள் எங்கிருந்து அன்னதானம் செய்ய முடியும். இதற்கும் நம்முடைய சான்றோர்கள், முன்னோர்கள் ஒரு சில எளிய பரிகாரங்களை சொல்லி வைத்துள்ளார்கள். அதுதான் அரிசிமாவால் கோலம் போடுவது.

- Advertisement -

எல்லோராலும் தினமும் சமைத்துக் கொண்டு போய் மனிதர்களுக்கு அன்னதானம் செய்ய முடியாது. மனிதர்களுக்கு கொடுத்தால் தான் அது அன்னதானம் என்று அர்த்தம் கிடையாது. வாயில்லா ஜீவன்களுக்கு போடப்படும் சாப்பாடும் அன்னதானம் தான். வாசல் தெளித்து அரிசி மாவால் கோலம் போட்டால் எறும்பு குருவி இதுபோல வாயில்லா ஜீவன்கள் வந்து அதை சாப்பிட்டுவிட்டு நம்மை வாழ்த்தும். ஆனால் இன்று அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வெறும் அரிசி மாவில் யாரும் கோலம் போடுவதில்லை. கோலமாவு, சுண்ணாம்பு, சில பேருக்கு கோலம் போட வீட்டு வாசலில் இடமே இல்லை. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை.

உங்களுடைய நிலை வாசலில் டைல்ஸ் ஒட்டி இருந்தால் கூட, அந்த இடத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு, பச்சரிசி மாவால் சின்னதாக ஒரு கோலத்தை போட்டு வையுங்கள். நான்கு எறும்புகள் வந்து சாப்பிட்டு சென்றாலும் உங்களுக்கான புண்ணியம் வந்து சேரும். வாசலில் எறும்பு சாக்பீஸ் கிழித்து விட்டு கோலம் போட்டால் இரும்புகள் வந்து சாப்பிடுவதற்கு வழி இல்லை அதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -

என்னதான் பெரிய அப்பார்ட்மெண்டாக இருந்தாலும், அதற்கு கேட் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். வீட்டிற்கு வெளி பக்கத்தில், இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கொஞ்சம் பச்சரிசியையும் வெல்லத்தையும் கலந்து உங்கள் வீட்டு நிலை வாசலுக்கு வெளியில் தூவி விட்டு வாருங்கள். இரவு நேரத்தில் சின்ன சின்ன பூச்சிகள், சின்ன சின்ன எலும்புகள் எல்லாம் உணவு தேடி வரும். நீங்கள் போட்ட இந்த அரிசி மாவையும் வெல்லத்தையும் எடுத்துக்கொண்டு போய் தன்னுடைய குடும்பத்திற்காக அந்த எறும்புகள் கொடுக்கும் போது நிச்சயமாக உங்களுடைய கர்மா குறையும். கடன் சுமை குறையும்.

இன்று வெள்ளிக்கிழமை. இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்துதான் பாருங்களேன். உங்கள் வீட்டு வாசலில் கொஞ்சமாக அரிசி மாவையும் வெல்லத்தையும் கலந்து தூவி விடுவதால் எந்த நஷ்டமும் ஏற்படப்போவது கிடையாது. பத்து ரூபாய்க்கு அரிசி மாவு, பத்து ரூபாய் வெல்லம் அல்லது பத்து ரூபாய் சர்க்கரை கலந்து கூட தூவி விடலாம் எந்த தவறும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: சாம்பிராணி தூப பலன்

இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். மன நிம்மதி ஏற்படும். தீராத கடன் சுமை தீரும். குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்களும் தீரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்