- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎன்றும் இளமையுடனும் பொலிவுடன் ஜொலிக்க

என்றும் இளமையுடனும் பொலிவுடன் ஜொலிக்க

- Advertisement -

நாம் எவ்வளவு நிறமாக இருந்தாலும் நம்முடைய முகம் பொலிவாக புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும், அதேபோல் எவ்வளவு வயதானாலும் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தாமல் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இளமையிலேயே வயதான தோற்றத்தை பெறாமல் ஓரளவிற்கு நம்முடைய இளமையை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளில் மிகவும் எளிமையான ஒரு வழியாகத்தான் பீட்ரூட் சீரம் திகழ்கிறது. இந்த பீட்ரூட் சீரத்தை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

என்றும் இளமையுடனும் பொலிவுடன் திகல

ஒருவர் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அவருடைய முகத்தில் உற்பத்தியாக கூடிய கொலாஜின் குறையாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முகச்சுருக்கம் எதுவும் ஏற்படாது. அதேபோல் நம்முடைய முகத்திற்கு தேவையான ஆன்ட்டி ஆக்சைடு கிடைத்துவிட்டால் நாம் எப்பொழுதும் பொலிவாகவும் அழகாகவும் திகழ்வோம். இவை அனைத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான உணவு பொருளாக திகழ்வதுதான் பீட்ரூட். பீட்ரூட்டை நாம் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. அதேபோல் பீட்ரூட்டை வைத்து சீரம் செய்து முகத்தில் தடவுவதன் மூலம் நம்முடைய இளமையையும் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

பீட்ரூட் சீரம் தயார் செய்வதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் தான் தேவைப்படும். அவை மூன்றும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களாகவே திகழ்கிறது. அவை பீட்ரூட், கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய். முதலில் பீட்ரூட்டை நன்றாக உரசி அதன் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல்லை பொறுத்தவரை எந்தவித நிறமும் வாசனையும் சேர்க்காத சுத்தமான கற்றாழை ஜெல்லாக கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அதேப்போல் தேங்காய் எண்ணெயும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜூலை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு பீட்ரூட் சாறு சேர்த்து, பத்து சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு நன்றாக கலக்க வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் விட்டமின் இ கேப்சூல் ஒன்றும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக கலந்தால் சீரம் பதத்திற்கு வரும். அவ்வளவுதான் சீரம் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த சீரத்தை தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் முகம் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து விட்டு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் நம்முடைய வேலையை நாம் பார்த்துக் கொள்ளலாம். இப்படி நாம் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்குவதோடு முகத்திற்கு ஒரு நல்ல நிறத்தையும் தரும். அதே போல் நம்முடைய முகம் எந்தவித மாசு மருக்களும் இல்லாமல் பொலிவாக திகழும்.

இதையும் படிக்கலாமே:பருக்களால் ஏற்பட்ட தழும்பு மறைய

நம்முடைய ஆரோக்கியத்தையும் நம்முடைய அழகையும் மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு பொருளாக பீட்ரூட் திகழ்கிறது என்பதால் பீட்ரூட்டை அதிகளவில் நாம் உணவாக எடுத்துக் கொள்வதோடு இந்த முறையிலும் நாம் சீரமாக தயார் செய்து பயன்படுத்தினோம் என்றால் நாம் என்றும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் திகழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்