- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval25-2-2025 அபிஜித் நட்சத்திர நேரம்

25-2-2025 அபிஜித் நட்சத்திர நேரம்

- Advertisement -

பிப்ரவரி மாதம் 25-2-2025 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து, பிரதோஷ நாளில் இந்த அபிஜித் நட்சத்திர நேரமானது நமக்கு வரவிருக்கிறது. நம்மில் பல பேருக்கு தெரியும். 27 நட்சத்திரம் இருக்கிறது என்று. பலரும் அறியப்படாத நட்சத்திரம் தான் 28 வது நட்சத்திரம். கேட்டதையெல்லாம் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்.

இந்த நட்சத்திரத்தை பூலோகத்திற்கு கொடுத்தால் இதை தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக, கிருஷ்ண பரமாத்மா இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் ஒளித்து வைத்துக் கொண்டதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அதிசக்தி வாய்ந்த நட்சத்திரம் மாதம் தோறும் 24 நிமிடங்கள் நமக்கு கிடைக்கும். அதன் அடிப்படையில் இந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை அபிஜித் நட்சத்திர நேரமானது எப்போது வருகிறது என்பதை பற்றித்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பிப்ரவரி 2025 அபிஜித் நட்சத்திர நேரம்

பிப்ரவரி 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து இந்த அபிஜித் நட்சத்திர நேரம் மாலை 6:18 இல் இருந்து 6:42 மணி வரை இருக்கிறது. இந்த 24 நிமிடங்களும் மிக மிக பொன்னான நிமிடங்கள். இந்த நாள், பிரதோஷ நாள் என்பதால் அந்த ஈசனின் ஆசீர்வாதத்தோடு, கிருஷ்ண பரமாத்மாவிடம் நீங்கள் இந்த 24 நிமிடங்கள் பிரார்த்தனையை மனமுருகி வைக்கலாம்.

உங்கள் வாழ்க்கையில் இது நடக்கவே நடக்காது என்று முடிவு கட்டி வைத்திருப்பீர்கள். அந்த ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்பது உங்களுடைய எண்ணம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள், திரும்பத் திரும்ப தோல்விதான் வருகிறது. அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இந்த 24 நிமிடத்தில் பிரார்த்தனை செய்து பாருங்கள். உங்களுடைய தலைவிதியானது மாற்றி எழுதப்படும். உங்கள் வாழ்வில் நடக்கவே நடக்காது என்ற அந்த நல்ல விஷயம் சீக்கிரம் நடக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம் தான் இந்த அபிஜித் நட்சத்திர நேரம்.

- Advertisement -

உத்திராட நட்சத்திரத்திற்கும் திருவோண நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட 24 நிமிடத்தை தான் அபிஜித் நட்சத்திரம் என்று சொல்லுவார்கள். இந்த குறிப்பிட்ட நேரத்தில் பூஜை அறையில் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து 2 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து உங்களுடைய பிரார்த்தனையை முழுமூச்சோடு வைத்தால் போதும். நீங்கள் எண்ணிய காரியம் ஈடேறும்.

இவ்வளவுதான் வழிபாடு. நம்பிக்கை மட்டும் தான் தேவை. நம்பிக்கையைவிட்டு விட்டு மற்ற வழிபாடுகளை செய்வதன் மூலம் எந்த ஒரு பலனும் உங்களுக்கு கிடைக்கப் போவது கிடையாது. கிருஷ்ண பரமாத்மாவின் மீது முழு நம்பிக்கை இருந்தால், இந்த 24 நிமிடத்தில் நீங்கள் என்ன விஷயத்தை வேண்டும் என்றாலும் சாதித்துக் கொள்ளலாம். உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பெருமாள் மந்திரம்

நேர்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேட்டது, உங்களை கூடிய விரைவில் வந்து சேரும் என்பதுதான் விதி. அதற்கான நட்சத்திரத்தை கடவுள் இன்று உங்களுக்காக கொடுத்திருக்கின்றான். அதற்கான நேரம் காலத்தையும் உங்கள் கையில் இன்று கொடுத்து விட்டார். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். நல்லது மட்டுமே நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்