- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கீரை கூட்டு செய்முறை

கீரை கூட்டு செய்முறை

- Advertisement -

கீரை வாங்கினாலே கடையல் செய்வதா? பருப்பு போட்டு கூட்டு வைப்பதா? பொரியல் வைப்பதா?
என்று தான் யோசிப்போம். இனி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்க, சட்டுனு இப்படி ஒரு கூட்டு வச்சி எல்லோரையும் அசத்திடுவீங்க! மணக்க மணக்க பாரம்பரியமான சுவையில் கீரை கூட்டு எப்படி வைப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள் :

கீரை – ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 12
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி – இரண்டு
துவரம் பருப்பு – இரண்டு கைப்பிடி
பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
பூண்டு – 10 பல்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்

- Advertisement -

கீரை கூட்டு செய்முறை விளக்கம் :

பருப்பு போட்டு எந்த கீரையை கூட்டு வைத்தாலும் இப்படி வைத்தால் ரொம்ப ருசியாக இருக்கும். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டு கீரை, பருப்பு கீரை, மணத்தக்காளி, சிவப்பு கீரை, பாலக்கீரை, பசலை என்று பருப்பு போட்டு கீரை கூட்டு செய்ய ஏதுவான எந்த கீரையாக இருந்தாலும் இப்படி செய்யுங்கள். முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு கைப்பிடி துவரம் பருப்பு, ஒரு கைப்பிடி அளவிற்கு பாசிப்பருப்பு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பின்பு குக்கரில் அதை சேர்த்து அதனுடன் ரெண்டு பழுத்த தக்காளி பழங்களை கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். உங்கள் காரத்திற்கு தேவையான அளவிற்கு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பத்து பல் பூண்டை தோல் உரித்து கழுவி போடுங்கள். பருப்பு சேர்ப்பதால் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் மேற்கூறிய அளவின்படி சேர்த்து பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு குக்கரை மூடி வையுங்கள். இரண்டில் இருந்து மூன்று விசில் உங்கள் குக்கருக்கு ஏற்ப விட்டு குழைய வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வையுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி ஒன்றிரண்டாக நறுக்கி வையுங்கள். பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெயை விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே:
பணம் தரும் சந்திர தரிசனம்

கண்ணாடி பதம் வர வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும். கீரை சுருள வதங்கி வெந்தது வந்ததும், வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட்டு, கூட்டு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் போல் தண்ணீர் கலந்து கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் அருமையான சுவையில் எல்லா வகையான கீரைக்கும் பொருந்தக்கூடிய இந்த ஆரோக்கியம் நிறைந்த கூட்டு ரெடி!

சற்று முன்