- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் நிறைவேற மூன்றாம் பிறை தரிசனம்

வேண்டுதல் நிறைவேற மூன்றாம் பிறை தரிசனம்

- Advertisement -

அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் மூன்றாம் பிறை தரிசனம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்திற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. 12 மாதங்களும் யார் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாம் பிறை தரிசனத்தை செய்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் எண்ணிலடங்கா நன்மைகள் நடைபெறும். ஆனால் 12 மாதங்களும் தரிசனம் செய்வது சற்றவருகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மூன்றாம் பிறை தரிசனம் என்பது நம் வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு சக்தி நிறைந்ததாக திகழ்கிறது. அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசன நாளன்று எந்த பொருட்களை கையில் வைத்துக்கொண்டு வேண்டினால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மூன்றாம் பிறை தரிசனம்

சிவபெருமான் தன்னுடைய தலையில் சூடிக்கொண்டிருக்கக் கூடிய ஒன்றாக திகழ்வதுதான் இந்த மூன்றாம் பிறை. மேலும் அம்பாளும் இதை தங்களுடைய தலையில் சூடி இருப்பார்கள். அதேபோல் விநாயகப் பெருமானும் இந்த மூன்றாம் பிறையை தங்களுடைய தலையில் சூடி இருப்பார்கள். இப்படி மூன்று பேரும் தங்களுடைய தலையில் இந்த மூன்றாம் பிறை சந்திரனை சூடி இருப்பதால் நாம் மூன்றாம் பிறையை தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளையும் பெறுவதோடு சந்திர பகவானின் அருளையும் பெற முடியும்.

- Advertisement -

அந்த வகையில் மாசி மாதத்தின் மூன்றாம் பிறை என்பது மார்ச் மாதத்தின் முதல் நாள் வருகிறது மாதத்தின் முதல் நாளில் மூன்றாம் பிறை வருவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் மாலை நேரத்தில் எப்பொழுதும் போல் வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டுவது போல் எப்பொழுதும் உங்களுடைய வழிபாட்டை நீங்கள் செய்வது போலவே செய்து கொள்ளுங்கள். பிறகு மாலை 6:30 மணி போல் வெட்ட வெளிக்கு வந்து மேற்கு திசை பக்கம் பார்க்கும் பொழுது மூன்றாம் பிறை காட்சி தரும். இது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தெரியும் என்பதால் சரியாக அந்த நிமிடத்தை நம்மால் கணக்கிட முடியாது இருப்பினும் நம் பொறுமையாக இருந்து பார்ப்பது நல்லது.

ஒருவேளை மேகமூட்டம் இருக்கும் பட்சத்தில் மூன்றாம் பிறையை நம்மால் தரிசனம் செய்ய முடியாது. ஆனால் மூன்றாம் பிறை கண்டிப்பான முறையில் வானத்தில் இருக்கும். அதனால் நம் கண்ணுக்கு தெரிகிறதோ தெரியவில்லையோ வெட்ட வெளியில் நின்று கொண்டு இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது நம்முடைய கையில் சிறிதளவு பச்சரிசியும் வசம்பும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை வசம்பு இல்லாத பட்சத்தில் விரலி மஞ்சளை வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதை நம்முடைய கையில் வைத்துக்கொண்டு மாலை 6:30 மணியிலிருந்து 7:00 மணிக்குள் மேற்கு திசை பார்த்து நின்று கொண்டு நமக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அந்த வேண்டுதலை முழுமனதோடு மூன்றாம் பிறை சந்திரனை நினைத்துக் கொண்டு கூற வேண்டும். பிறகு “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை 9 முறை கூற வேண்டும்.

இப்படி கூறி முடித்த பிறகு வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் ஒரு வெள்ளை நிற துணி அல்லது வெள்ளை நிற பேப்பரில் நாம் கையில் வைத்திருந்த பொருட்களை வைத்து மடித்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அடுத்த மாதம் மூன்றாம் பிறை வரும்பொழுது இந்த பச்சரிசியை பறவைகளுக்கு தானமாக தந்துவிட வேண்டும். விரலி மஞ்சள் அல்லது வசம்பை கால் படாத புனிதமான செடிகள் இருக்கக்கூடிய தொட்டியில் போட்டு விட வேண்டும். மறுபடியும் புதிதாக இதே போல் செய்து வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் எந்த வேண்டுதலை மூன்றாம் பிறை சந்திரனிடம் வைத்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:மாதம் முழுவதும் பணவரவு ஏற்பட

சந்திர பகவானின் அருளையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு உதவக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை இந்த முறையில் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் வேண்டியது கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்