- Advertisement -

தேவதை நாள் வழிபாடு

- Advertisement -

மார்ச் மாதம் மூன்றாம் தேதி என்பது தேவதை நாளாக கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் வளர்பிறை சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. 333 என்ற எண்ணிக்கையில் வரக்கூடிய இந்த நாளை தான் தேவதை நாள் என்று கூறுகிறோம். இந்த நாளில் நாம் சில சூட்சமான வழிபாட்டு முறையை செய்து வேண்டுதலை வைக்கும் பொழுது அந்த வேண்டுதல் விரைவிலேயே இந்த பிரபஞ்சத்தால் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூட்சமமான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மூன்று என்ற எண் அடிக்கடி நம்முடைய கண்ணில் படுவதன் மூலம் நம்முடைய பணத்தேவைகள் பூர்த்தியாகும் என்று பிரபஞ்சத்தால் உணர்த்தப்படுகிறது என்று பொருள்படும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த மூன்று என்ற எண் மார்ச் மாதம் என்பது மூன்றாம் மாதமாகவும் மூன்றாம் தேதியாகவும் அதேசமயம் அன்று மூன்று திதிகளும் சேர்ந்து வருவதால் 333 என்று அமைப்பில் அன்றைய தினம் அமைகிறது. அதனால் அன்றைய தினத்தில் 3:00 மணியிலிருந்து 3:33 மணிக்குள் நாம் இந்த சூட்சமமான வழிபாட்டை செய்ய வேண்டும். இது விடியற்காலை வரக்கூடிய 3 மணியாக இருந்தாலும் சரி மதிய நேரத்தில் வரக்கூடிய 3 மணியாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டால் நம்முடைய பண தேவைகள் பூர்த்தியடையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேற்ச்சொன்ன இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வீட்டு பூஜை அறையில் கிழியாத நல்ல வெற்றிலையாக மூன்று வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மூன்று வெற்றிலைகளிலும் புழுகை தடவிக்கொள்ள வேண்டும். அதை ஒரு தாம்பாள தட்டில் வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு மூன்று விதமான பணக் கோரிக்கைகளை மூன்று பிரியாணி இலைகளில் எழுதி அந்த வெற்றிலையின் மேல் வைத்து விடுங்கள். இதில் இதற்காக இவ்வளவு பணம் தேவை என்று குறிப்பிட்டு எழுத வேண்டும்.

பிறகு லிங்க முத்திரையை கையில் வைத்துக்கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை 333 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி அந்த குறிப்பிட்ட நேரத்தில் நாம் செய்யக்கூடிய இந்த வழிபாட்டால் சிவபெருமான், விநாயகர், சந்திரர் மற்றும் குபேரரின் அருளால் நாம் என்ன பண தேவை வேண்டும் என்று வேண்டுதல் வைத்தோமோ அந்த பண தேவை விரைவிலேயே நிறைவடையும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த பிரியாணி இலைகளை தீபத்தில் காட்டி எரித்து விட வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் கும் குபேராய நம”

இதையும் படிக்கலாமே:மோசமான விதியை மாற்றும் முத்திதி சதுர்த்தி

அரிதாக வரக்கூடிய இந்த தேவதை நாளை முழுமையாக பயன்படுத்தி பண தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு செய்பவர்களுக்கு விரிவிலேயே அந்த பணத் தேவைகள் பூர்த்தியடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்