வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் நினைத்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நம்முடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ அவை அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த திதியாக திகழ்வது பஞ்சமி திதி. இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி அன்று மனக்குழப்பம் தீருவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மன குழப்பம் தீர பஞ்சமி பரிகாரம்
பிறர் நம்மை தவறாக பேசிவிட்டார் என்று மனவேதனைக்கு உள்ளாகி இருப்பவர்களும், இதை செய்தால் சரியாக இருக்குமா? அதை செய்தால் சரியாக இருக்குமா என்ற மனக்குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பவர்களும், யாரிடமும் சொல்ல முடியாத கவலையை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து தினம் தினம் நொந்து கொண்டு இருப்பவர்களும் வாராகி அம்மனை நினைத்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தால் போதும். அவர்கள் மனதில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதியாக வாழ முடியும்.
பஞ்சமி திதி என்பது இன்று இரவே தொடங்கி விடுகிறது. அதனால் இந்த பரிகாரத்தை இன்று இரவே நாம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். யாரால் நமக்கு மன கஷ்டம் ஏற்பட்டதோ, மன குழப்பம் ஏற்பட்டதோ, மன வருத்தம் ஏற்பட்டதோ அவர்களின் பெயரை எழுதி அதற்கு பக்கத்தில் பட் பட் எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு இந்த பேப்பருக்கு நடுவே சிறிதளவு வெண்கடுகை வைத்து நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த பேப்பரை உங்களுடைய இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு இடது கையால் உங்களுடைய தலையை வலம் இருந்து இடமாக மூன்று முறையும் இடமிருந்து வலமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றி முடித்த பிறகு இந்த பேப்பரை உங்களுடைய தலையணை உறைக்குள் வைத்து விட வேண்டும். இரவு அதில் படுத்து உறங்குங்கள். மறுநாள் இரவு வரை உங்கள் தலையணை உறைக்குள்ளேயே இந்த பேப்பர் இருக்கட்டும்.
மறுநாள் இரவு இதை எடுத்து வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று எரித்து விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய மனக்குழப்பத்திற்கு காரணமானவர்கள் மேலும் நம்மை குழப்பாமல் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். தேவையற்ற மன சஞ்சலமும், குழப்பமும், கவலையும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டம் வர மருதாணி பூ
வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும் அந்த வகையில் இந்த வெண்கடுகு பரிகாரத்தை முழுமனதோடு செய்து மனக்குழப்பத்திலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.