நம்மை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள் போன்றவற்றில் உயிரூட்ட சத்துக்கள் உள்ளன. நமக்கு எல்லா விதத்திலும் பயன் தரக்கூடியதாக இருக்கக்கூடிய சில முக்கியமான மரங்களில் ஆலமரமும் ஒன்று! அகன்று பருத்த இந்த ஆலமரத்தை கண்டாலே ஒருவித நடுக்கமும், பயமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஆல மர இலைகள் எப்படி முடி உதிர்வை தடுத்து நிறுத்தி, அடர்த்தியாக வளர செய்யும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
ஆலமரத்தில் இருக்கும் பட்டை, வேர், இலை, பழம், விழுது என்று எல்லாமே பயன்படக்கூடியது. ஆலமர பழத்தில் மட்டும் ஏராளமான நுண் ஊட்ட சத்துக்கள் உள்ளன. 100 கிராம் ஆலமர பழங்களில் 250 கிராம் கலோரி கிடைக்கும். மூன்று கிராமிற்கு மேலே புரதசத்தும், ஒரு மில்லி கிராம் மேலே விட்டமின் சி யும் கிடைக்கும். 68 மில்லி கிராம் மெக்னீசியம், 162 மில்லி கிராம் கால்சியம், 2 மில்லி கிராம் இரும்புச்சத்து, 67 மில்லி கிராம் பாஸ்பரஸ், 680 மில்லி கிராம் பொட்டாசியம் சத்தும் கிடைக்கும். ஆலமர பழங்கள் பல விதமான மருத்துவ பலன்கள் தரக்கூடியது.
ஆலமர இலைகள் முடி உதிர்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வுகளை தருகிறது. வழுக்கை விழுந்த இடத்திலும் மீண்டும் முடி முளைக்க செய்யும் அற்புதம் நிறைந்த மூலிகை ஆகும். சொட்டை தலையாக இருப்பவர்களுக்கு மீண்டும் அந்த இடத்தில் அடர்த்தியாக முடி வளர செய்யக்கூடிய அற்புதம் இந்த இலைகளுக்கு உண்டு. அதற்கு என்ன செய்யலாம்? என்று பார்ப்போம்.
25 கிராம் அளவிற்கு ஆலமர கொழுந்து இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தளிர் இலைகள் எடுத்து நன்கு உரலில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். நைஸ் ஆக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 100 எம்எல் அளவிற்கு ஆளி விதை எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து வையுங்கள். இந்த பேஸ்ட்டை தலைக்கு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை அலசி விட வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை நீங்கள் செய்து வந்தால் முடி உதிர்வது வேகமாக நிற்கும். பின் மீண்டும் அந்த இடத்தில் நுண்ணிய முடிகள் வளர்ந்து வழுக்கையாக இருந்த இடத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும். இப்போது முடி அடர்த்தியாவதற்கு இந்த முறையை பின்பற்றுங்கள். அதேபோல 10 இலைகளை எடுத்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெய் சேர்த்து லேசாக சூடு படுத்துங்கள். சூடு ஏறியதும் நீங்கள் அரைத்து வைத்த ஆலமர இலை விழுதை சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
நிதி நிலைமை உயர வெற்றிலை பரிகாரம்
பின்னர் இந்த எண்ணெயை வடிகட்டாமல் அப்படியே தலைக்கு 10 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால் முடி காடு போல அடர்த்தியாக வளரும். ஆண், பெண் என்கிற எந்த வித்தியாசமும் இல்லாமல் இந்த எளிய குறிப்பினை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள், நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும். இன்றைய தலைமுறைகளுக்கு தலைமுடி உதிர்வது மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இயற்கையான இந்த ஆலமர இலை ட்ரீட்மென்ட் விரைவில் பயன் தரக்கூடியது. பக்கவிளைவுகள் எதுவும் இல்லாதது, எனவே நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.