புதிய சொத்துக்கள், மனை, சொந்த வீடு வாங்குவது, கட்டுவது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருகனுடைய அருள் தேவை. முருகன் மற்றும் அங்காரகன் அருள் இருந்தால், எளிதாக இவைகளை நாம் பெற்றுவிடலாம். வளர்பிறை மற்றும் தேய்பிறையில் முருக வழிபாடு மேற்கொண்டு வருபவர்களுக்கு விரைவில் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிட்டும். சொத்துக்கள் வாங்கும் யோகம் பெற வளர்பிறையில் முருகனுக்கு செய்ய வேண்டிய வழிபாடு முறை என்ன? சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து காண இருக்கிறோம்.
முருகனுக்கு உகந்தது வளர்பிறை, வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டு வருபவர்களுக்கு சொத்து ரீதியான பிரச்சனைகள் தீரும். குடும்பத்திற்குள் சொத்துக்களால் சண்டை, சச்சரவு இருந்தால் இந்த வழிபாட்டினை மேற்கொண்டு வரலாம். சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது மனை வாங்க வேண்டும், சொத்துக்கள் சேர்க்க வேண்டும் என்று கடின உழைப்பை கொட்டுபவர்கள், வளர்பிறையில் முருகனுக்கு இந்த வழிபாட்டை செய்யுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
ஒருவருக்கு எல்லா தெய்வங்களுடைய ஆசிர்வாதமும் ஒருசேர கிடைத்துவிட்டால் யோக்கியவான் ஆகிவிடுகிறார். உங்கள் துன்பமெல்லாம் மறையும் கிரகநிலை அமைந்து விட்டால், இந்த வழிபாட்டினை செய்தால் உடனடியாக நீங்கள் சொத்துக்களை வாங்கி குவிக்கலாம். அடுத்த சில நாட்களில் பல ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப் போகிறது. கிரக பெயர்ச்சிகளின் பொழுது நடைபெறும் மாற்றங்களால், நம் வாழ்க்கையும் இனி மாறும்.
ஒரு மாதத்தில் 15 நாட்கள் வளர்பிறையும், 15 நாட்கள் தேய்பிறையும் வருகிறது. இந்த வளர்பிறை நாட்களில் வரக்கூடிய 15 நாட்கள் தவறாமல் முருகனை வழிபாடு செய்ய வேண்டும். அங்காரகனுக்கு உகந்தது செவ்வரளி. முருகனுக்கும் செவ்வரளி மலர்களை அர்ச்சித்து வழிபடலாம். 15 நாட்களும் முருகனை உங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பாக அலங்காரம் செய்து பூஜையில் வையுங்கள்.
செவ்வரளி மலர்களால் 27 முறை அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சனை செய்யும் பொழுது கீழ் வரும் இந்த மந்திரத்தை ஒவ்வொரு முறையும் உச்சரிக்க வேண்டும். 15 நாட்களும் இதுபோல தொடர்ந்து செய்ய வேண்டும். இடையில் தடை ஏற்பட்டால் அடுத்த முறை வளர்பிறையில் தொடருங்கள். பூஜையில் முருகனுக்கு உகந்த நைவேத்திய பொருட்களை படைக்க வேண்டும். பழங்கள், தாம்பூலம் வைத்து ஒரு டம்ளரில் பச்சரிசியை நிரப்பி, அதனுள் முருகனுடைய வேல் ஒன்றை சொருகுங்கள்.
மந்திரம் :
ஓம் மங்கள கார்த்திகேயா
சரவணபவ ஹ்ரீம் காரிய
சித்திதராயே நமோ நம!!
இதையும் படிக்கலாமே:
ஞாயிற்றுக்கிழமை அம்மன் வழிபாடு
பின்னர் இந்த மந்திரத்தை சொல்லி 27 முறை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். சத்தி வாய்ந்த இந்த மந்திரம் சொத்துக்களை வாங்கக்கூடிய யோகத்தை தரக்கூடியது. முருகனுடைய அருளை பரிபூரணமாக நமக்கு கொடுத்து, இருக்கின்ற தோஷங்களில் இருந்து நம்மை விடுதலை செய்து, நல்வாழ்வு அமைய வழிவகுக்கும். செவ்வாய் பகவான் ஆசியும் கிட்டும். ஒவ்வொரு வளர்பிறை நாளும் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வந்தால், சீக்கிரமே சொந்த வீடு கட்டுவீர்கள். இதுவரை வாடகை வீட்டில் துன்பப்பட்டவர்கள், இனி சொந்த வீட்டில் வசிக்கக்கூடிய யோகம் பெறுவீர்கள். மனை வாங்கி வைத்தவர்கள் வீடு கட்ட முடியவில்லை என்கிற ஏக்கம் மறைந்து சீக்கிரமே உங்கள் இடத்தில் நீங்கள் வீடு கட்டுவீர்கள். மேலும் பிள்ளைகளுக்கு நகை சேர்ப்பவர்கள், சொத்துக்கள் சேர்ப்பவர்கள் முருக வழிபாட்டை மேற்கொண்டு சேர்க்க ஆரம்பியுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.