வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அம்பாள் வழிபாடு செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல நம்முடைய துன்பங்கள் தீர ஞாயிற்றுக்கிழமையும் அம்பாளை வழிபாடு செய்யலாம். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் அம்பாள் கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய அளவில் துன்பங்கள் இருக்காது. வந்த துன்பங்கள் கூட வந்த வழி தெரியாமல் விலகிச் செல்லும்.
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையில் கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் இந்த பரிகாரத்தை செய்தால் குடும்பத்திற்கு கோடி நன்மைகள் ஏற்படும். உங்களுடைய வீட்டில் மன நிம்மதியே இல்லை, பிள்ளைகள் சொல் பேச்சை கேட்பது இல்லை, வீட்டில் நோய் நொடி பிரச்சனையால் வீண் விரைய மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கிறது.
சண்டை சச்சரவுகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை. இப்படி வீடு சூனியம் பிடித்தது போல இருள் சூழ்ந்து நிற்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இந்த இரண்டு பொருளை வாங்கிக் கொண்டு போய் அம்மன் கோவிலில் கொடுத்து பிரச்சினையை அம்மனிடம் ஒப்படைத்து விடுங்கள்.
இரண்டு கை நிறைய உதிரி செவ்வரளி பூக்கள். ஒரு கை நிறைய மஞ்சள் கிழங்கு. இந்த இரண்டு பொருளையும் ஒரு மஞ்சள் துணி பையில் போட்டு அம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகர் கையில் இந்த பொருட்களை அம்மனுக்காக கொடுப்பதாக சொல்லி கொடுத்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.
இதை கொடுத்துவிட்டு அம்பாள் கோவிலில் இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பிரச்சினைகளை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இனி பிரச்சனைக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது என்று சொல்லி அம்மனை நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து, அம்மன் கோவிலை மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து, வீடு திரும்ப வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு.
இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்தாலே உங்களுடைய கஷ்டங்களில் பாதி குறைந்துவிடும். வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளும் இதை செய்யலாம். உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் தான் இருக்கிறது. அந்த கோவிலில் துர்க்கை அம்மன் இருக்கிறாள் என்றால், அந்த துர்க்கை அம்பாளுக்கு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது.
இதையும் படிக்கலாமே: சனி தோஷம் விலக சிவ நாமம்
ஊர் மாரியம்மன் கோவிலுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் எந்த அம்மன் கோவில் இருந்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.