- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண கஷ்டத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பண கஷ்டத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது தான் சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை தான் நாம் சங்கடகர சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அதனால் பலரும் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி என்பது பங்குனி மாதத்தின் மூன்றாம் நாள் மார்ச் மாதத்தின் 17ஆம் நாள் மாலை 6:38 மணிக்கு தொடங்கி மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 18ஆம் தேதி இரவு 8:0 3 வரை இருக்கிறது.

முழுமையாக விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். விரதம் இருந்து சந்திர தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் திங்கட்கிழமை சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் விநாயகர் பெருமானை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணமாக திகழ்வது பணம்தான். இந்த பணம் நம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் இல்லாததால் தான் நாம் கஷ்டப்படுகிறோம். மேலும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நமக்கு வருமானம் இல்லை என்றாலும் நாம் கஷ்டப்படுவோம். இவற்றில் எது இருந்தாலும் அந்த கஷ்டத்தை நீக்கி நமக்கு போதுமான அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேருவதற்கு இந்த பங்குனி மாதத்தின் சங்கடகர சதுர்த்தி நாளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மார்ச் மாதம் 17ஆம் தேதி பிரம்மமுகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டு பூஜை அறையில் விநாயகரின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களுடைய வலது கையில் எடுத்து உங்களுடைய நெஞ்சுக்கு அருகில் வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானின் மூலமந்திரமான “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அந்த பச்சரிசியை அருகில் இருக்கக்கூடிய எறும்பு புற்றில் போட வேண்டும். அருகில் எறும்பு புற்று இல்லை என்பவர்கள் அரச மரத்தடிக்கு கொண்டு சென்று போடலாம்.

- Advertisement -

இப்படி செய்துவிட்டு அன்றைய தினத்தில் காலையிலும் மதிய நேரத்திலும் எந்தவித உணவும் எடுக்காமல் விநாயகப் பெருமானின் மூல மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும். மாலை 6:30 மணிக்கு மேல் வீட்டில் விநாயக பெருமானின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்கள் அந்த அபிஷேகம் அனைத்தையும் செய்து முடித்த பிறகு விநாயகப் பெருமானின் மூல மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். பிறகு விநாயகர் அகவலை முழுமையாக பாராயணம் செய்ய வேண்டும்.

கடைசியாக “ஓம் சக்தி கணபதியே சரணம், ஓம் சக்தி கணபதியே போற்றி, ஓம் சக்தி கணபதியே நன்றி” என்ற மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு உங்களுடைய விரதத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு பச்சை நிற பேனாவை எடுத்து உங்களுடைய இடது உள்ளங்கையில் 2639 என்னும் எண்ணை எழுத வேண்டும். பிறகு விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு படுத்து உறங்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து அமர்ந்து ஒரு வெள்ளை நிற பேப்பரில் பச்சை நிற மை கொண்ட பேனாவை பயன்படுத்தி மேல் சொன்ன அந்த எண்ணை 27 முறை எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்துவிட்டு பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தும் தீரவேண்டும் என்று விநாயகர் பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும். யார் ஒருவர் இந்த வழிமுறைகளை பின்பற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். திடீர் பணவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமும் வந்து சேரும்.

இதையும் படிக்கலாம்:தினமும் கண் திருஷ்டி கழிய பரிகாரம்

இரவு நேரத்தை கணக்கில் வைத்து பார்க்கும் பொழுது திங்கட்கிழமை வருகிற சங்கடஹர சதுர்த்தியை நாம் முழுமையாக பயன்படுத்தி இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் விநாயகப் பெருமானின் அருளால் நம்முடைய பண கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்