ஒருவர் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி விழுவதற்கு காரணம் இந்த கண் திருஷ்டி. கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று சொல்லுவார்கள். அப்பேற்பட்ட கொடிய கண் திருஷ்டியை நம்மிடமிருந்து விரட்டி அடிக்க என்ன பரிகாரம் செய்வது. வாரத்தில் ஒரு நாள், திருஷ்டி கழிய பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை சிலபேர் செய்வார்கள். சில பேர் மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்று கண் திருஷ்டி கழிய பரிகாரம் செய்வார்கள்.
ஆனால் கண் திருஷ்டிக்கான பரிகாரத்தை தினம் தினம் செய்வது மிகவும் நல்லது. அடுத்தவர்களுடைய கண்பார்வை, அனுதினமும் நம்மேல் விழுகிறது. தினமும் வேலைக்கு செல்பவர்கள், தினமும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள் அல்லது தினம் தினம் வீட்டை பார்த்துக் கொள்ளக் கூடிய பெண்களுக்கு கூட, அடுத்தவர்களின் பொல்லாத பார்வையால் கண் திருஷ்டி விழும். இப்படி தினம் தினம் உங்கள் மேல் விழும் கண் திருஷ்டியை அகற்ற ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய பரிகாரம் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.
கண் திருஷ்டி விலக விபூதி பரிகாரம்
இரவு வீடு திரும்பியதும் கை கால் முகம் கழுவி விட்டு பூஜையறைக்கு செல்லுங்கள். இரவு தூங்குவதற்கு முன்பாக கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். கொஞ்சம் திருநீறு எடுத்து “சிவ சிவ” என்ற நாமத்தை சொல்லி குல தெய்வத்தை மனதார நினைத்து கையில் விபூதியை வைத்துக்கொண்டு, உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, அந்த விபூதியை ஒரு முறை காற்றின் ஊதி விட்டு விடுங்கள்.
சும்மா கொஞ்சமா விபூதி எடுத்தால் போதும். தலையை சுற்றிய விபூதியை, ஊதி விட்டு விட்டு பிறகு நீங்கள் தூங்க செல்லலாம். இப்படி செய்தால் அனுதினமும் உங்கள் உடம்பை பிடித்த கண் திருஷ்டி விலகும். அனுதினமும் உங்களை துரத்தி வரும் கெட்ட சக்திகள் உங்கள் உடம்பை விட்டு வெளியேறிவிடும்.
தினம் தினம் நம் உடம்பை கெட்ட சக்திகள் துரத்தி வருமா. ஆம், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் நம் உடம்பின் மீது விழும்போது, நம்முடைய உடம்பு சோர்வடைகிறது. அன்றாட வேலையில் அக்கறை செலுத்த முடியாத சூழ்நிலை, படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலையும் குழந்தைகளுக்கு வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகள் வருவதும், கண் திருஷ்டியின் மூலமாகத்தான்.
இதையும் படிக்கலாமே: சனி தோஷம் விலக சிவ நாமம்
தினம் தினம் தூங்க செல்வதற்கு முன்பு, பூஜை அறையில் சென்று விபூதியை வைத்த இந்த பரிகாரத்தை செய்யும் போது, உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும். இதே போல உங்களுடைய குழந்தைகளுக்கு, அம்மா அப்பா யாராவது இந்த பரிகாரத்தை செய்துவிடலாம். நல்லதே நடக்கும் எளிமையான பரிகாரம், ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம், தினம் தினம் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தூங்க செல்வதற்கு முன்பு நீங்களே முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளக்கூடிய பரிகாரம், நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறலாம்.