கல்வி கரையில என்று கூறுவார்கள். கல்விக்கு மட்டும் தான் கரை என்ற ஒன்று கிடையாது. நாம் படிக்க படிக்க ஏதாவது ஒரு புதுவிதமான படிப்பு வந்து கொண்டே இருக்கும் என்றும், இந்த கல்வியை மட்டும் தான் யாராலும் திருட முடியாது என்றும் நம்முடைய முன்னோர்கள் கல்வியின் மேன்மை குறித்து பலவிதமான பாடல்களையும் குறள்களையும் பாடி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்வியை இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் படிப்பதில் பலவிதமான தடைகள் ஏற்படுகின்றன. அந்த தடைகளை நீக்கி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு எலுமிச்சம் பழ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கல்வி தடை நீக்கும் எலுமிச்சம்பழம்
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் சரஸ்வதி தேவியின் அருளும், புதன் பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். இவர்கள் இருவரும் தான் கல்விக்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள். மேலும் குரு பகவானின் அருள் கிடைத்தால் சிறந்த குருவின் வழிகாட்டுதலோடு நம்முடைய கல்வி அறிவு என்பது சிறந்து விளங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி இவர்கள் அனைவரின் அருளை பெறுவதற்கு முதலில் நமக்கு குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருள் வேண்டும். இவர்கள் இருவரையும் நினைத்து செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு யாருக்கு கல்வியில் தடைகள் இருக்கிறதோ பிரச்சினைகள் இருக்கிறதோ அவர்கள் முழுமனதோடு பூஜை அறையில் கையில் மூன்றே மூன்று எலுமிச்சம் பழங்களை வைத்துக்கொண்டு அந்த எலுமிச்சம் பழங்களை உங்களுடைய நெஞ்சு பகுதிக்குள் வைத்து உங்களுக்கு கல்வியில் என்ன தடைகள் இருக்கிறதோ அந்த தடைகள் விலக வேண்டும் என்று உங்களுடைய இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த மூன்று எலுமிச்சம் பழங்களை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு முதல் நாள் வைத்திருந்த அந்த மூன்று எலுமிச்சம் பழங்களையும் எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அம்மனின் ஆலயத்தில் கண்டிப்பான முறையில் திரிசூலம் என்பது இருக்கும். அந்த திரிசூலத்தின் மூன்று பகுதிகளிலும் இந்த மூன்று எலுமிச்சம் பழங்களை குத்தி விட்டு அம்மனை வழிபாடு செய்துவிட்டு வரவேண்டும். நம்முடைய இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் எந்த தெய்வமாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் இந்த எலுமிச்சம் பழத்தை நாம் அம்மன் ஆலயத்தில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் தான் குத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கல்வியில் இருக்கக்கூடிய எந்த ஒரு தடையாக இருந்தாலும் அந்த தடைகள் நீங்கி விரைவிலேயே அவர்கள் எதிர்பார்த்த படிப்பையும் கல்வியறிவையும் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:எதிரிகள் தொல்லை நீங்க காலபைரவர் வழிபாடு
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை படக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் என்பது வரும். அந்த தடைகளை தவிடு பொடியாக்க இந்த எலுமிச்சைப்பழம் வழிபாடு உதவும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.