- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபங்குனி மாத தேய்பிறை பிரதோஷம் 2025

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷம் 2025

- Advertisement -

நாளைய தினம் 27.3.2025 வியாழக்கிழமை பங்குனி மாதத்தின் தேய்பிறை பிரதோஷமானது வரவிருக்கிறது. இதை குருவார பிரதோஷம் என்று சொல்லுவார்கள். ஜாதக கட்டத்தில் குரு சரியில்லை, திருமணம் நடக்கவில்லை, குழந்தை பாக்கியமும் இல்லை, பணத்திற்காக கஷ்டப்படுகிறீர்கள் என்றால், நாளைய தினம் கட்டாயமாக கோவிலுக்கு சென்று, பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

குரு திசை நடப்பவர்கள், நாளைய தினம் கட்டாயமாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல இப்போது தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களும், நாளைய தினம் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து, பிரதோஷ நேரத்தில் தக்ஷிணாமூர்த்தியையும் வழிபாடு செய்ய வேண்டும். இவை அனைத்தும் எல்லோருக்கும் பொதுப்படையாக மிக மிக நல்ல பலனை கொடுக்கும் வழிகாட்டு முறைகள் நாளைய தினம் தவறாமல் செய்து விடுங்கள்.

- Advertisement -

பங்குனி பிரதோஷத்தில் செய்ய வேண்டிய தானம்

பங்குனி மாதம் வெயில் மிக மிக அதிகமாக இருக்கிறது. இந்த மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தானம் உள்ளது. அந்த தானத்தை இந்த பிரதோஷ நாளில் செய்தால் பல்லாயிரம் மடங்கு பலன் நமக்கு கூடுதலாக கிடைக்கும். நாளைய தினம் மதிய நேரத்தில் உங்களால் முடிந்த அளவு தயிர் சாதம், நீர் மோர், தண்ணீர் பாட்டில் இந்த மூன்று பொருட்களை வாங்கி இயலாதவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

இதை நீங்கள் கோவிலை சென்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. மதிய நேரத்தில் வீதியில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த வரை இந்த மூன்று பொருட்களை தானம் செய்யுங்கள். மூன்று பொருட்களையும் கட்டாயம் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

- Advertisement -

இரண்டு பேருக்கு தயிர் சாதம் வாங்கி உங்கள் கையால் தானம் கொடுத்தால் கூட போதும். உங்களுடைய பாவங்கள் குறைந்து, கர்ம வினைகள் குறைந்து, வாங்கிய கடனும் படிப்படியாக குறைய தொடங்கும். வருமானம் படிப்படியாக உயர தொடங்கும். இது பொதுப்படையாக செய்ய வேண்டிய தானம்.

உங்களுக்கு ஜாதக கட்டத்தில் பிரச்சனை இருக்கிறது. குரு பகவானால் பிரச்சனை, வேலையில் பிரச்சனை, பணம் நகை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனை, இருக்கிறது நிறைய கைநீட்டி கடன் வாங்கிட்டீங்க, நகை எல்லாம் அடமானத்தில் இருக்கிறது, பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை, இதுபோல குரு பகவான் சார்ந்த பிரச்சினைகள் உங்களுடைய குடும்பத்தில் அதிகமாக இருந்தால், நாளைய தினம் கொஞ்சம் எலுமிச்சை பழ சாதம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நாளை வியாழக்கிழமை மாலை வழக்கம் போல 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். இந்த பிரதோஷ நேரத்தில் குருபகவானுக்கு அந்த எலுமிச்ச பழ சாதத்தை வைத்து, நெய்வேதியம் செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்தால், உங்களுடைய குடும்பத்தில் குரு சம்மந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: இழந்த அனைத்தும் கிடைக்க பரிகாரம்

இதே பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு தயிர் சாதம் செய்து வைத்து, வழிபாடு செய்ய, உங்களுடைய கர்ம வினைகள் குறையும். செய்த பாவத்திற்கு தண்டனைகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரங்கள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் இவைகளை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்