- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேலை தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர

வேலை தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர

- Advertisement -

ஒருவர் நன்றாக படிப்பதற்கும் படித்து முடித்த பிறகு படித்த படிப்பிற்குரிய வேலையில் சேர்வதற்கும் அந்த வேலையில் சிறப்பான முறையில் பதவி உயர்வு பெற்று கை நிறைய சம்பளம் வாங்குவதற்கும் கிரக சூழ்நிலைகள் முக்கியமான காரணமாக திகழ்கின்றன. இதே போல் தான் ஒருவர் தொழிலை ஆரம்பிப்பதற்கும் அந்தத் தொழிலில் லாபத்தை பெறுவதற்கும் தொழிலை மேலும் பலவிதமான முன்னேற்றங்களை அடைவதற்கும் கிரக சூழ்நிலைகள் முக்கியமான காரணமாக திகழ்கின்றன.

இந்த கிரக சூழ்நிலைகளில் தொழில் தொடர்பான கிரகமாக திகழ்பவர் சனீஸ்வர பகவான் மற்றும் வேலை தொடர்பான கிரகமாக திகழ்ந்தவர் புதன் பகவான். இவர்கள் இருவரும் எந்த இடத்தில் இருக்கிறார்கள் யாரை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நம்முடைய வேலை மற்றும் தொழிலின் தன்மைகள் இருக்கும். இவர்கள் பாதகமான சூழ்நிலையில் இருந்தால் நாம் எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும் தொழிலை பார்த்தாலும் அதில் நமக்கு பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பிரச்சினைகளை நீக்கி புதன் மற்றும் சனீஸ்வர பகவானின் அருளைப் பெறுவதற்கு செல்ல வேண்டிய ஆலயத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வேலை தொழில் பிரச்சனைகள் தீர

ஒரு தொழிலை தொடங்கப் போகிறோம், அந்தத் தொழில் நல்ல விதமாக நடைபெற வேண்டும் என்று நினைத்தாலும் தொடங்கிய தொழில் நல்ல விதமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது ஆனால் திடீரென்று அதில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது அதை மேலும் நல்லபடியாக முன்னோக்கிச் செல்வதற்கு பலவிதமான தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலும் நாம் சனீஸ்வர பகவானே வழிபாடு செய்ய வேண்டும். சனீஸ்வர பகவானுக்குரிய கோவிலாக திருநள்ளாறு திகழ்கிறது. திருநள்ளாறு கோவிலுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று வழிபாடு செய்வதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளை நம்மால் பெற முடியும். அந்த நாள்தான் சனிக்கிழமை.

சனிக்கிழமை அன்று காலையில் திருநள்ளாறில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். நளன் தீர்க்கதில் குளித்துவிட்டு ஆலயத்திற்கு சென்று சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நிற துணியை வாங்கித் தந்து தங்கள் பெயரிலும் தாங்கள் செய்யக்கூடிய தொழிலின் பெயரிலும் அர்ச்சனை செய்து அவரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு ஆலயத்திற்கு வெளியே வந்து தங்களால் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் செய்ய முடியுமோ அத்தனை நபர்களுக்கும் அன்னதானம் செய்து விட்டு வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -

வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும், வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க வேண்டும், படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதன்கிழமை அன்று மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய சுந்தரேஸ்வரர் புதன் பகவானின் அம்சமாகவே திகழ்கிறார். அவருக்கு பச்சை நிற பட்டு துணி வாங்கி கொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த ஆலயத்திலேயே குறைந்தது 5 மணி நேரமாவது நேரத்தை செலவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று வேலை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:வீட்டில் நிம்மதி நிலைத்திருக்க
செய்யக்கூடிய வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று முழுமனதோடு இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் நல்ல முன்னேற்றமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்