கடனை திருப்பி அடைக்க உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இன்று சதுர்த்தி திதியும் இருக்கிறது. கிருத்திகை திதியும் இருக்கிறது. அது போக இன்று ஆங்கில மாதத்தின் முதல் நாள். ஆக மொத்தத்தில் செவ்வாய் பகவான், விநாயகர், முருகர் இவர்கள் மூவருக்கும் இந்த நாளில் சக்தி அதிகம்.
இன்றைய கலியுகத்தில் மக்கள் அதிகப்படியாக அவதிப்படக்கூடிய கஷ்டம் என்றால், அது கடன் கஷ்டம் தான். உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால், செய்ய வேண்டிய எளிமையான விநாயகர் வழிபாட்டையும், எளிமையான கடன் தீர்க்கும் கணபதி மந்திரத்தையும் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இன்று மாலை இந்த விநாயகர் வழிபாட்டை செய்ய வேண்டும். மாதத்தின் துவக்க நாள் இன்று. ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது. 1-4-2025 ஆம் தேதி இன்று மாலை 6 மணிக்கு சந்திரன் உதயமான பிறகு, வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனை கொடுக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை கட்டி போட்டு விடுங்கள். கடன் தீர கொஞ்சம் வில்வ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
வில்வ இலைகளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை சொல்லும்போது கடனை சீக்கிரம் திருப்பி அடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிவிரைவாக கிடைக்கும். செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் சதுர்த்தி திதியான இன்றும், இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம், அல்லது மூலம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் இந்த பரிகாரத்தை செய்தாலும் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும். கடன் சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும். சரி விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் போது சொல்ல வேண்டிய ருணம் தீர்க்கும் மந்திரம் என்ன.
ருண ஹரண கணபதி மந்திரம்
“ஓம் கணேசாய ருணம் சிந்தி வரேண்யம் ஹூம் நம்; பட் ஸ்வாஹா”
ஓம் க்லௌம் க்ரோம் கணேசாய ருணம் சிந்தி வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”
இந்த இரண்டு மந்திரத்தையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும். இரண்டு மந்திரமும் சேர்ந்து உச்சரித்துவிட்டு ஒருமுறை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக 108 முறை இந்த மந்திரத்தை இன்றைய தினம் சொல்வது சிறப்பான பலனைத் தரும்.
இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு உரிய திருமண தடை விலக
இன்று இந்த மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் கடன் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. மாதத்தின் முதல் நாளே நம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்கு கடவுள் நல்லதொரு வாய்ப்பை தந்திருக்கின்றார். இந்த வாய்ப்பை யாரும் தவற விடாதிங்க. இன்று விநாயகர் வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள்.